பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நிற்போரிடம் பண்புடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் முயல முடியுமா? அப்படி ஒரு அரிய மனப்பக்குவத்தைத்தான் விளையாட்டுப் போட்டிகள் அளிக்கின்றன. வளர்க்கின்றன. உருவாக்குகின்றன.

Ο O O

வேண்டாத வேலை

உடற்கல்வி ஆசிரியர்களை, விளையாட்டுத் துறையில் உள்ளவர்களை, போட்டிகள் நடத்தத் தான் சொன்னார்களே தவிர, போட்டி போட்டுக் கொண்டு பிரிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று யார் சொன்னது? ஆற்றில் நீராடப் போய், நீரோடு போன கதையாயிருக்கிறதே?

Ο O O

உண்மை புரியும்

விளையாட்டில் விதி முறைகளுக்கடங்கி, மாற்றாரை மதித்து பண்புள்ளவனாக விளையாடுபவரே வாழ்க்கையிலும் பண்புள்ளவர்களாக நடந்து கொள்வார்கள். வம்பர்களாகவும் வல்லடி கண்டர்களாகவும் விளையாடியவர்கள், தமது வாழ்க்கையில் அதைவிட மோசமானவர்களாகவே இருக்கின்றார்கள். இதை நீங்கள் வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள். உண்மை புரியும்.