பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


நீடிக்கும். எமன் என்றைக்கு ஜெயிக்கிறானோ, மனிதருக்கு அப்ப அது நாக் அவுட் ஆயிடும். அப்புறம் ஏது சண்டை? எத்தனை முறை எண்ணினாலும், அப்புறம் மனிதன் எழுந்திருக்கவே முடியாது.

Ο O O

ஒப்பனை எதற்கு?

எத்தனை தடவை திருப்பித் திருப்பிக் கண்ணாடியில் பார்த்தாலும், பலகோணத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்தாலும், இருக்குற முக அழகைத் தான் கண்ணாடி காட்டும். இல்லாத அழகை எப்படி ஏற்றியா காட்டும்?

முக அழகுங்குறது உள்ளத்துல இருக்குற உன் அழகை வெளியே காட்டுவதுதான். நல்ல மனசும் நல்ல நினைவும் இருந்தால்தான், முகத்தில் ஒருவித தெளிவும், ஒய்யாரமான பொலிவும் நிறைஞ்சிருக்கும்.

அந்த நல்ல மனசும் நல்ல நினைவும் தர்றது நல்ல சக்தியுள்ள உடம்புதான். உடம்பை சக்தியா வச்சுகிட்டா, முகஅழகு தானாகவே வந்துடும். ஒரு கம்பீரமும் இயற்கையாகவே வந்துடும். அப்புறம் ஒப்பனை சாமானெல்லாம் எதுக்கு? வேண்டாத வேலைதானே!


Ο O O