பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


விளையாட்டின் விந்தை

திட்ட வட்டமாக திட்டம் போட்டுக் கொண்டு போட்டிகளுக்குச் செல்பவரே, திறமாக விளையாட முடியும். தீர்மானமான வெற்றியைப் பெற முடியும். தோற்கும் பொழுதும் மரியாதை பெற்று தோற்கக் கூடும். கொட்ட மடித்துக் கொண்டு விளையாடச் செல்பவர்கள், அவமானப்பட்டுத் திறம் குலைந்து திரும்புவார்களே தவிர, கூட்டத்தினரின் பரிகாசத்துக்கும் ஆளாவார்களே தவிர, வெற்றியை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலைக்கு ஆளாவார்கள். அது தான் விளையாட்டுத் துறையின் விந்தையான ஆட்சியாகும்.

Ο O O

நமக்கு ஒரு முன்னோடி

அவசர நேரத்தில் நிதானமாகவும், ஆத்திரப்படும் இடத்தில் அமைதியாகவும், தோல்வி கண்ட சமயத்தில் சிந்தனை செய்தும் வெற்றி கண்ட போது வாய் ஜம்பம் அடிக்காமலும், வாய் சுவை தான் வாழ்வென்று கருதாமலும், உழைப்பில் சுவை கண்டு உழைத்தவர்கள் தான் வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றார்கள். நாமும் ஏன் முயலக் கூடாது!

Ο O O

லாரி மாறினால்...

லாரியைப் பார்க்கிறோம். எல்லா வாகனங்களையும் விட மிகப் பயனுள்ள எந்திரம் அது.