பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


உண்மையாகவே வலிமையான தேகத்தைக் கொண்டிருக்கும் மனிதனுடைய இலக்கணமாகும்.

Ο O O

யோசிக்கும் காலம்

‘தன்னைப் போல் பிறரையும் நேசி’ என்றார்கள் பெரியோர்கள். தன்னையே நேசிக்கிறவர்கள் தான் தட புடலாக வாழ்கின்றார்கள். தன்னைப் போல் பிறரையும் நேசிக்கின்றவர்களோ தரம் தாழ்ந்து இருக்கின்றார்களே! நேசிப்பதைப் பற்றியே யோசிக்க வேண்டிய காலமாக அல்லவா போய்விட்டது.

Ο O O

சிரமமான சுலபம்

ஒருவருக்குத்தெரிந்ததை அறிந்து பாராட்டுவது. தான் மனிதனுக்கு அழகு. தெரியாததை சுட்டிக் காட்டி, திறமையற்றவர் என்றும், ஒன்றுக்கும் உதவாதவர் என்றும் ஒருவர் மனதை ஏன் புண்படுத்த வேண்டும்? அவர் முயற்சியை ஏன் முனை முறிக்க வேண்டும்?

நல்லவர்க்கு அழகு பிறரை பாராட்டுவதும். பாராட்டுப் பெறுவதும் தான். பிறரை முன்னேற. வைப்பதும், தான் முன்னேறுவதும் தான்.

Ο O O