பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஒப்பற்ற உலகம்

உலகம் என்பது என் கோயில்
செய்யும் தொழிலே என் தெய்வம்
உழைப்பு என்பது என் வேதம்
உதவுதல் என்பது என் கொள்கை
கடமைஎன்பது என் குருநாதர்

இதைத்தான் எல்லா மதங்களும் தத்துவங்களும் சொல்லுகின்றன.

Ο O O

திட்டமில்லையென்றால்?

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடாது நேரத்தை வீணாக்குபவர்,தன்னையே. தானே கெடுத்துக் கொள்பவராகிறார். அவரைக் கெடுக்க வேறுயாருமே வேண்டாம்! நுனிக்கிளையிலிருந்தவாறு அடிக்கிளையை வெட்டுபவர் நிலைதான் அவருக்கு கடைசியில் வரும்.

Ο O O

படைப்பின் ரகசியம்

இயற்கையின் படைப்பும் ரகசியமும் இப்படித்தானோ? ஒரு உடலில் முளைக்கின்ற முடி எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும், இடத்திற்கேற்ப எப்படியெல்லாம் பெயர் பெற்றுக் கொள்கிறது. எப்படி ஏற்கப்படுகிறது. விரும்பப் படுகிறது. வெறுக்கப் படுகிறது.