பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


பிறக்கும் இடத்தாலா அல்லது இருக்கும் சிறப்பாலா ஒருவர் மதிப்பு பெறுகிறார்? புதிராக அல்லவா இருக்கிறது!

Ο O O

வாக்கிங் புகழ்

புகழ் என்பது நாயுடன் வாக்கிங் போவது போல, அதை சங்கிலி போட்டுக் கட்டிக் கொண்டு, விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு, சங்கடப்பட்டபடி நடப்பது வாக்கிங் அல்ல. அது பிறரது ஏளனத்துக்கு ஆளாக்கி விடும்! அழைக்காமலேயே கூடவே ஓடி வருகின்ற நாய்க்குட்டியைப் போல, நிலையான புகழ் வர வேண்டும். அது தான் நிம்மதியான வாக்கிங் என்கிற நிலையான புகழ்.

Ο O O

அதிக துன்பம் எப்போது?

அளவாகப் பேசி வளமாக வாழ்வது தான் அறிவுடையோர் பண்பாடு. ஏனெனில், அதிகமாகப் பேசினால் அதுவே துன்பமாகி விடுகிறது.

Ο O O

சோதனையும் வேதனையும்

மனிதர்களுக்குக் கொஞ்சமாவது சோதனைகளும், வேதனைகளும் இருக்கப்போய்தான் இந்த அளவுக்காவது மனிதத் தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் உலவுகின்றார்கள். இல்லையேல்,