பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


வெட்டியபிறகு தழைக்காத மரத்திற்கு மொட்டை மரம் என்று பெயர். வீழ்ந்த பிறகு முயற்சிக்காத மனிதனுக்கு என்ன பெயர்..? உங்கள் விருப்பம் போல் நீங்களே பெயர் கொடுங்கள் அதுவே பொருத்தமாக இருக்கும்.

Ο O O

இயற்கையின் ரகசியம்

தலையிலே முடிகள் உதிர்கின்ற போது முகத்திலே முடி அதிகமாக, மேலும் அதிவேகமாக முளைக்கின்றதே! ஏன்? வயது அதிகமாக ஆக, கொஞ்சம் காதல் வேகமும் அதிகப்படியாக வருகிறதே! அது ஏன்?

Ο O O

வளர்க்கும் புகழ்

புகழ் என்பது போராடிப் பெறுவதல்ல. சதிபுரிந்து கவர்ந்து கொள்வதல்ல. புகழ் என்பது ஊடுருவல் போன்றது. பிறர் கண்களுக்கு எரிச்சல் இல்லாமல், எண்ணங்களுக்குப் பொறாமை தராமல், எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாமல் இலாவகமாகப் பெறுகின்ற புகழ்தான் சிறந்த புகழாகும். அதுவே வளரும் புகழாகும். வளர்க்கும் புகழும் ஆகும்.

Ο O O