பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


இஸ்திரிப் பெட்டியின் இதம்

இஸ்திரிப் பெட்டியில் அதிக சூடு இருந்தாலும் துணி பாழாகிவிடும். சூடே இல்லாமல் போனால், துணி பணியாமல் போய் பலனில்லாமல் ஆகிவிடும். ஆகவே, சலவைத் தொழிலாளி ஒருவர் பக்குவமான சூட்டுடன் பதமாக வைத்துக் கொண்டு வேலை செய்வதைப் போல, எந்தப் பிரச்சினையை அணுகினாலும் சுறுசுறுப்புடன் அதே சமயத்தில் பரபரப்பு இன்றி அணுக வேண்டும். சுறுசுறுப்பு இல்லாத சோம்பல் தன்மையும் படபடத்துப் போகின்ற பதட்டமும் பிரச்சினையை தவிர்ப்பதற்குப் பதிலாக திசை மாற்றி விடும்-அதிக மாக்கி விடும்.

Ο O O

ஆத்ம திருப்தி

ஒரு காரியத்தை செய்து முடிக்க முடியாது என்பதற்குக் காரணம் கூறுபவர்கள், கூற முயல்பவர்கள் சோம்பேறிகள். அவர்கள் என்றும் இருந்த நிலையிலேயே இருந்து போவார்களே ஒழிய முன்னணிக்கு வரவே மாட்டார்கள். ஒருகாரியத்தை முடியாவிட்டாலும் செய்ய முயலும் முயற்சிக்கு காரணங்களைக் கண்டு பிடிப்பவர்களும், முயற்சி செய்பவர்களுமே முன்னுக்கு வர முடியும். நாயை அடித்து விரட்டி வெற்றி பெறுவதை விட, யானையை அடக்க முயற்சித்துத் தோற்பதில் ஒன்றும் அவமானமில்லை. ஒருகாரியத்தை செய்ய முயன்று தயங்கித் தேங்கி நிற்பதைவிட, செய்ய