பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

 நமக்கு வருகின்ற புகழ், வீதிச் சுவற்றிலே ஒட்டப்படும் வண்ணச் சுவரொட்டி போல மினுக்கி உடனே மறைந்து போகக் கூடியதாக இருக்கக் கூடாது. கடையின் பெயர்ப் பலகை போல தனியான புகழ் உடையதாக இருக்க வேண்டும்.

Ο O O

நிலைமைகளும் நினைப்பும்

நிலைமைகளை அனுசரித்து அதற்கேற்றபடி நடந்து கொள்ளத் தெரிந்தவர்களே நீடித்த இன்பத்தைப் பெற முடியும். நிலையாக அதே உணர்வுடன் வாழ்வைத் தொடர முடியும். தண்ணிரைப் பாருங்கள். கோடைகாலத்தில் ஆவியாகிக் கொள்கிறது. குளிர்காலத்தில் கட்டியாக மாறிக் கொள்கிறது. இடைப்பட்ட காலத்தில் நீராக ஒடிக் கொண்டிருக்கிறது. வசதி இருக்கின்ற காலத்தில் ஆவியாகப் பறந்து விடுகிறது. உதவி, இல்லாத நாட்களில், ஐஸ் கட்டியாக இருந்து தன் மதிப்பைக் கட்டிக் காத்து, இயல்பான காலத்தில் நீராக. எல்லோருக்கும் உதவுகின்ற இதயத்தைக் கொண்டு வாழ்ந்தால், அதுதான் இன்பம். அந்த வாழ்க்கை தான் சொர்க்கமான வாழ்க்கை...

Ο O O