பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

 பதவியும் உதவியும்

பதவியைக் காட்டி உதவி செய்வதற்காகப் பணம் பெற்றுக் கொள்ளும் செயலானது தனது அழகைக் காட்டிப் பணம் வாங்கிக் கொள்ளும் பரத்தையரை விட கீழ்மையானதாகும். இந்த ‘கீழ்மை’தான் இன்றுமேன்மையானதாகப் பாவிக்கப்படுகிறது. பாதுகாக்கப்படுகிறது. பேரளவிலே பின்பற்றப்படுகிறது. பெருமைக்குரியதாகவும் மதிக்கப்படுகிறது.

Ο O O

பக்தி என்றால்

ஆண்டவனிடம் எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பது பக்தியல்ல. ‘நான் உனக்குப் பூஜை செய்கிறேன். விரதம் இருக்கிறேன். எனக்கு பொருள் கொடு’ என்று கேட்பது பேரம். ஒரு வியாபாரம், வந்ததற்காக, எதுவாக இருந்தாலும் நமக்குக் கிடைத்ததற்காக ஆண்டவனிடம் நன்றி சொல்கிறோமே; அதுதான் உண்மை பக்தியாகும்

Ο O O

இலைகளும் தலைகளும்

மரம் செடி கொடிகளில் உள்ள இலைகளைப் பார்க்கிறோம். நிறத்தால், வடிவத்தால் அவை