பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

 மதமான மனம்

மக்களிடையே மதம் வளர்வதற்குக் கூட மனம் இங்கு தேவையில்லை. பணம் தான் தேவைப்படுகிறது.

பணத்தால் மனம் கிடைக்கிறது. அதன் தொடர்பாக மதம் கிடைக்கிறது. அதோடு ‘மதமும்’ கிடைக்கிறது. மதம் பிடித்தவர்களை மாற்றவா முடியும்.

Ο O O

இரண்டு கால் மிருகம்

இலட்சியம் இல்லாத மனிதர் இரண்டு கால் மிருகமாவார்.

Ο O O

கலி காலம்

நியாயத்தைத் தவறுபடுத்திக் காட்டவும் தவறினை நியாயப்படுத்தியும் பேசுகின்ற வல்லமை மிக்கவர்கள் வாழும் காலமே கலிகாலமாகும்.

Ο O O

எருமைத்தனம்

பணச்சேற்றில் மன எருமை படுத்துக் கொண்டு வர மாட்டேன் என்கிறது அறிவு எஜமானன்.