பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

 களையும் எதிர்பார்த்து, ஆதாயம் தேடுகின்ற இடத்திற்குப் பெயர்தான் அரசியல் என்பதாகும்.

Ο O O

உங்களின் எதிர்காலம்

மற்றவர்களைப் பற்றியே குறைத்தும் பழித்தும் பேசுகின்ற பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். உங்களைப் பற்றி சிந்திக்க, நிறைய நேரம் கிடைக்கும். உங்கள் எதிர்காலமும் உயர்ந்து போகுமே!

Ο O O

சிறுவர்கள்-பெரியவர்கள்

சிறுவர்கள் ஒரு நாள் பெரியவர்கள் ஆகி விடுவார்கள். பெரியவர்கள் ஆனவர்கள் சிறுவர்களாக ஆகவே முடியாது. இதுதான் இயற்கையின் ஒரு வழிப் பயணம்.

இது புரியாமல் சிறுவர்கள் பெரியவர்கள் போல “பல” காரியங்களைச் செய்து, சீக்கிரமே சீரழிகின்றார்களே! இவர்களை யார் தான் திருத்த முடியும்? காலங்காலமாய் இந்த கண்றாவிக் கதை தான் தொடர்கிறது.

Ο O O