பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

 வீதிகளில் மேதாவிகள்

அதிக விலையுள்ள கார். ஆடம்பரமான கார். எப்படித்தான் செலவழித்து அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், செலவில்லாமல் நிறைத்துக் கொள்கின்ற காற்று, சக்கரத்தில் இல்லாமல் போனால் வண்டியே ஓடாது. படுத்து விடும். மனித காருக்கும் செலவில்லாத காற்று நிறையவே தேவைப்படுகிறது. சரியாக நிறைத்துக் கொள்ளாத மனிதக் கார்கள், படுத்துக் கிடக்கின்றன. இந்த விஷயத்தில் அறிவுறை தருவதற்குக் கூட ஆட்கள் குறைவாகத் தான் இருக்கின்றனர். ஒடித்திரியும் காற்றை உற்சாகமாகப் பயன்படுத்திக் கொண்டால் உல்லாசமாக வாழலாம் என்று தான் விளையாட்டுகள் கூறுகின்றன. வீதியிலே நின்று அழைக்கும் மேதாவிகளுக்கு மதிப்பு ஏது? விளையாட்டும் இந்த மரியாதையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Ο O O

துக்கமும் தூக்கமும் துக்கத்தை வளர்ப்பவர்கள், தூக்கத்தை இழக்கிறார்கள். தூக்கத்தை இழப்பவர்களும் துக்கத்தில் ஆழ்ந்து போகின்றார்கள். துக்கமும் தீரவேண்டும், தூக்கமும் நிறைய வேண்டும் என்றால், அதற்கு சிறந்த வழி மனப்பூர்வமாக விளையாட்டில் ஈடுபட வேண்டியதுதான். உழைப்புக்கு உழைப்பு. மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி.

Ο O O