பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


கியாதியும் வியாதியும்

இறக்கும் பொழுது கியாதியுடன் (புகழுடன்) இறப்பவர்கள் எல்லோரும், சிறந்த மனிதர்களாக வாழ்ந்து சென்றவர்கள் ஆவார்கள். வெறும் வியாதியுடன் இறப்பவர்கள், சரியாக வாழவில்லை என்றே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. ‘வியாதி என்பது சிறுகச் சிறுகச் செய்த தவறுகளுக்குத் தண்டனை’ என்று தானே நமக்கு நினைக்கத் தோன்றுகிறது!!

Ο O O


முடியும் பிள்ளைகளும்

தலையிலிருந்து விழுந்த முடியைப் பார்த்து, அதற்கு சொந்தக்காரன் சிந்தை தளர்ந்து பேசுகிறான். உன்னை வளர்க்க எத்தனை பாடுபட்டிருப்பேன். எவ்வளவு செலவழித்திருப்பேன். எப்படியெல்லாம் பாதுகாத்திருப்பேன். இப்படி நன்றியில்லாமல் என்னை விட்டுப்போகிறாயே! என்னை கேவலப்படுத்திவிட்டுப் போகிறாயே. அவன் அலறலுக்கு அந்த முடி பதில் கூறுகிறது. உங்கள் வாரிசுகள் மட்டும் யோக்கியமோ! உங்கள் பிள்ளைக் குட்டிகள் பிரிந்து போவது, நடந்து கொள்வது போலத்தான் நாங்களும். இதைப் போய் பெரிதுபடுத்திக்கொள்கின்றீர்களே! விழுந்த முடி காற்றிலே மிதந்து கொண்டே சென்று விட்டது. முடியின் விசுவாசம்தான் இன்று பிள்ளைகளின் விசுவாசத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

Ο O O