பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


விளையாட்டு உணவு

குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது பால் போன்றது. சிறுவர்களுக்கு பலகாரம் போன்றது. இளைஞர்களுக்கு அறுசுவை விருந்து போன்றது. வயதானவர்களுக்கு பலம் தருகிற ‘டானிக்’ போன்றது. வியாதியால் அவதிப்படும் வியாதியஸ்தர்களுக்கோ அது கைகண்ட மருந்தாகப் பயன்படுகிறது. விளையாட்டு ஒளஷதம் என்பது மண்ணுலகின் தேவாமிர்தமாகும்.

Ο O O

இரக்கத்தின் மறுபக்கம்

இரக்கப்படுகிற எவனும் இந்தக் காலத்தில் ஏமாளி என்று தான் அழைக்கப்படுகிறான். ஆண்களுக்கு இரக்கம் காட்டினால் கடனாளியாக வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு இரக்கம் காட்டினால் அது பேராபத்தில் போய் முடிகிறது. இருந்தாலும் இரக்கம் காட்டாமல் எப்படி இருக்க முடிகிறது. தெரிந்து கொண்டே எதிரே உள்ள குழியில் விழுகிறோம் என்று புரிந்து கொண்டே பள்ளத்தில் விழுந்து, சிரமப்பட்டு முயன்று மேலேறி வந்து மீண்டும் விழமுயன்று கொண்டிருக்கிறோம். இரக்கத்தின் மறுபக்கம் இறக்கமாக அல்லவா முடிகிறது.

Ο O O