பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

கனக்கும் தலை

தலை கனக்கிறது என்று தனது தலையில் உள்ள சுமையை இறக்கி வைக்கலாம். முடியவில்லையென்றால் தள்ளி விடலாம். தவறில்லை.

தலை கனக்கிறது என்று தலையையே எடுத்து விட வேண்டுமென்று முயல்பவனை எப்படி அழைப்பார்கள்! உதவி செய்யும் உயிரான நண்பனை உதறித்தள்ள முயல்பவனும், உதறி விடுபவனும் இந்த நிலைக்குத்தான் ஆளாவான்.

Ο O O

கஷ்டம் வேண்டாம்

நாம் கஷ்டப்பட்டு வாழலாம். அது தவறில்லை. ஆனால், பிறரை நாம் கஷ்டப்படுத்தி வாழக் கூடாது. ஏனெனில், அது தர்மமில்லை.

Ο O O

சிரித்து வாழவேண்டும்

நாடும் சுகமெல்லாம் நானிலத்தில் ஒன்றுதான்
பாடும் பயனும் பல்சுமையே-ஓடும்
காலத்தைப் பழித்துநல் கோலம் இழக்காமல்
சீதத்தால் சிரித்தே வாழ்!

Ο O O