பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

 முள் செருப்பு

தொடர்ந்து உண்மை பேசுகிறவன் முற்பகுதியில் வேதனையடைந்தாலும், பிற்பகுதியில் பெருமையுடனும், பேரானந்தத்துடனும் வாழ்கின்றான். தொடர்ந்து பொய் சொல்கிறவன் முற்பகுதியில் பெருமையோடு வாழ்வதுபோலத் தோன்றினாலும் பிற்பகுதியில் பேரழிவினை அடைகின்றான். தோல் செருப்பு நடக்க உதவும். நாளெல்லாம் உதவும். முள் செருப்பு எப்படி உதவும்?

Ο O O

உப்புமலை

பிறரைக் குற்றம் சொல்லத் தெரியும் மனிதர்களுக்கு, தாங்கள் குற்றம் செய்யாமல் வாழத் தெரியவில்லையே! மற்றவர்கள் குறைகள் தாம் அவர்களுக்கு மலையாய் தெரிகிறது. அந்த மலையை நினைத்து நினைத்து அவர்கள் தங்கள் வாழ்கையை மடுவில் வீழ்த்திக் கொள்கிறார்கள். தம்மைத் திருத்திக் கொள்ளத் தெரியாத மனிதர்கள்தாம் இன்று தலைவர்களாக இருக்கின்றார்கள். தலைமை சரிதானே! உப்பை மலையாகக் குவித்துக் காண்பித்தாலும் சர்க்கரை சுவை வந்துவிடப் போவதில்லையே!

Ο O O