பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


குழப்பம்...குழப்பம்

சத்தமிட்டுக் கத்தி அகவுகின்ற மயிலின் குரலை கேட்கும் பொழுது மனதில் எத்தனை வெறுப்பு அதிர்ச்சி. இத்தனை அழகான மயிலுக்குப் போய் இறைவன் இப்படி குரலைக் கொடுத்திருக்கிறானே. கறுத்த குயிலுக்கு காணாமிர்தமான இனிமை ஏன் இப்படி? இயற்கையின் அமைப்பே இப்படித்தான் இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி இல்லாததற்காக பொல்லாத குழப்பம் ஏன்? மனப்பக்குவத்திற்கு ஒரு மணியான காட்சியல்லவா இது!

Ο O O

தாமரைக் குளம்

தாமரைக் குளத்திலே தண்ணீர் நிறைந்திருந்தால், அதில் பூக்கும் பூக்களும் மேலே அழகாகத் தெரியும், தண்ணீர் உயர உயரத் தாமரையும் உயரும்.

தண்ணீர் இல்லாமல் வற்றிவிட வேண்டும் நாங்கள் மட்டும் (பூக்கள்) உயர்ந்து நிற்கவேண்டும் என்று பூக்கள் விரும்பினால் அது எப்படி? அற்பத்தனமான ஆசைதானே! தனக்கு உதவும் முதலாளி அழிந்துவிட வேண்டும். தான் மட்டும் உயர வேண்டும் என்று ஒரு தொழிலாளி விரும்பினால் அது என்ன நியாயம்?

Ο O O