பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


தக்காளி தர்மம்

என்னை ஒரு கூடை தக்காளிப் பழம் வாங்கி வரச் சொன்னார்கள். பல கடைகளில் புகுந்து, மிகவும் சிரமப்பட்டு, நல்ல பழக்கூடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டு வந்தேன். அத்தனைப் பழங்களிலும் ஒரு பழம் நசுங்கி அழுகிய நிலையிலே இருந்தது. இப்படியா பழம் வாங்கி வருவது என்று ஒரு நசுங்கிய பழத்தைக் காட்டி, கோபமாகக் கேட்டார்கள்.

நல்ல பழங்களாக அதிகம் வாங்கியதற்காகப் பாராட்டவில்லை. ஒரு அழுகிய பழத்திற்காக ஆத்திரமான குற்றச்சாட்டு. ஆயிரம் நல்லது செய்தாலும், ஒரு சிறு தவறு அத்தனை நல்லதையும் கெடுத்துவிடுகிறதே! இதுதான் சமுதாய தர்மமாக அமைந்து போயிருக்கிறது. போற்றும் பண்பு தலை துாக்கி எழுந்தால்தான், பொய்யும் தீமையும் புறம் போகும். இல்லையேல் தலையில் அமர்ந்து ஆகடியம்தான் செய்யும்.

Ο O O

லீலா விநோதம்

ஒருவனுக்கு வசதி அதிகமாக ஆக, ஆக வக்ரமங்கள்தான் பீறிட்டுக் கிளம்புகிறது. சிறிய ஒரு துன்பத்தைக்கூட தாங்கிக் கொள்ள முடியாதவாறு மனம் அடித்தளமாகத் திரியத் தொடங்குகிறது.

Ο O O