பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


ஒரு பரிதாபம்

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அடிப்படை தேவை உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க ஒரு வீடு. அவற்றிற்காகத்தானே அல்லும் பகலும் பாடுபடுகிறோம். ஆயிரம் பிராயத்தனப்படுகிறோம். அவற்றை அடைந்தும் விடுகிறோம். ஆனால்... ஆனால்... உணவை சுவைத்து உண்ண முடியாத சுவையற்ற சூழ்நிலை; பகட்டான உடைகள் உடுத்தினாலும், எடுப்பாகத் தெரியாத தொய்ந்த நிலை. வீட்டில் மெத்தையில் படுத்தாலும் உறங்க முடியாத முள் நிலை. ஏன்? இந்த மூன்றையும் அனுபவிக்க வேண்டுமானால், நலமான உடல் இருந்தால்தானே முடியும். நமது மனித இனம், இந்த மூன்றையும் அனுபவிக்க உதவும் உடலை மறந்துவிடுகிறதே பரிதாபமாக அல்லவா இருக்கிறது!

Ο O O

பலஹீனம் போக்கும் வழி

பிறரது தவறினைப் பொறுப்பதும், மன்னிப்பதும் உரம் வாய்ந்த உடலுள்ளவர்களால்தான் முடியும். ஏனெனில் உரம் வாய்ந்த உடலில்தான் உரம் வாய்ந்த மனம் இருக்கிறது. பலஹீனம் பிறரது. தவறைக் கண்டு பதப்பட்டும். பொங்கியெழும். பதிலுக்குப் பதில் செய்யத் துடிக்கும். ஆகவே பலஹீனத்தை ஒழிக்க. விளையாட வாருங்கள்!

Ο O O