பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

 நீங்களும் வைத்தியர்தான்

நோய் வந்தபின் அதைப் போக்கவும் மருந்து தந்தும் உதவுபவர் வைத்தியர். நோய் வராமல் உடற் பயிற்சி செய்து தடுத்து வாழ்பவரும் ஒரு வைத்தியர் தானே! நீங்களும் வைத்தியர் ஆகலாமே!

Ο O O

விஷ சம்பளம்

எந்த இடத்தில் யாரிடத்தில் எந்தப் பணியை செய்து கொண்டிருந்தாலும் சரி, அதை தன் சொந்தக்காரியம் போல சிந்தித்து, உண்மையாக உழைப்பவர்கள் தான் வாழ்க்கையில் சுகமாக இருக்கிறார்கள். வறுமை இருந்தாலும் கூட கவலையில்லாமல் வாழ்கிறார்கள். தன் குடும்பம் பிழைக்க உழைப்பதற்காக சம்பளம் தரும் எஜமானரை ஏமாற்றிக் கொண்டு வேலை செய்து காலத்தை ஒட்டுபவரை கடவுள் தான் தண்டிக்கிறார். ஏமாற்றிப் பெறும் சம்பளமும் விஷத்தைச் சாப்பிடுவதும் ஒன்று தான். கொஞ்சங் கொஞ்சமாக கொல்லுகிற சக்தி இரண்டுக்கும் நிறையவே.

Ο O O