பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


ஏக்கப் படுகிறேன்
தூக்கம் கெடுகிறேன் நான் !
ஏன் அப்படி ?
இருப்பதால் திருப்தி
இல்லாத குயுக்தி
எப்படி ஏற்படுகிறது
இதற்கென்ன பெயர் ?
இதுதான் மனிதத்தனம்

Ο O O

மனிதத்தனம்

ஆயிரம் ரூபாய்களை
வாய்க்குள்ளே போட்டு
விழுங்கி ஏப்பமிட்டு
வெளிச்சத்திலே
மண் நட்சத்திரமாய்
விழி பிதுக்கிக் காட்டும்
பட்டுச் சேலைக்குள்ளே
பதிந்த மேனியாள் அவள் !
வண்ணத்தில் கொஞ்சமும்
வளைந்து பின் போகாமல்