பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78



எடுப்பாய் போட்டு
இறக்கிய பாயசம்!
தின்னக் கசக்கிறது!
திகட்டியே தொலைக்கிறது!
ஏன் இப்படி?
அடுத்தவர் வீட்டின் மேல்
அக்கறையோ அக்கறை !
தடுத்தாலும் கேட்காத
தாராளப் பாசம்!
தங்கள் குடும்பமெனில்
தடுமாறும் தடித்தனம் ஏன்?
இது தான் மனிதத்தனம்
இது ஒரு மாதிரியான
இளிச்ச வாய்த்தனம்!

மனிதத்தனம்-6 (முரண்பாடு)

மாறாத மகிழ்ச்சி
மறையா மனஅமைதி!
மலரும் மனநிறைவு
மனிதர்க்குத் தினம் தேவை!
மதியுள்ளோர் உணர்வாரே
இது போனால் ஏது சுகம்?