பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


என்பவர் எல்லாரும்
உண்மையில் உதிரிகள்!
ஓடாத தேர்கள்!
உறுதியிலா வேர்கள்!
முடியாது என்றபடி
முனகுவோர்க்கெல்லாம்
மூளையும் பஞ்சம்
மூலை தான் மஞ்சம்
பலஹீனப் பாயில்
படுப்பாரே நோயில்!
இன்றைய சோம்பேறி
நாளை பிச்சைக்கரன்
முடியாது என்பவன்
முடமான மனிதனே!
பணத்திற்கு ஏக்கம்!
பகட்டிற்கு நோக்கம்!
சுகத்திற்குத் துடிப்பு
ஜெக ஜால நினைப்பு!
உட்கார்ந்து உறங்கி
ஒரு நூறு கனவினிலே
மல்லாந்து கிடப்பவர்
முன்னேறு வாரோ !
தெரிந்தும் ஏன் தான்
திசைமாறிக் கிடக்கிறார்!
நாளை நமதென்று
நம்பியே கழிக்கின்றார் ?
அது தான் மனிதத்தனம் !
ஆறறிவோடு
அழியாத சோம்பல்தனம்