பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. மலையிலும் வலிய பெரிய வடிவான அனுமனே மழைத்துளியின் இடைவெளியில் புகுந்துவரும் மெலியனே அன்னையைத் தேடிச் சென்ற சிறிய திருவடியே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


8. விண்ணே விதானமாக நெடுங்கடல் நீல விரிப்பாக ஆயிரம் கருடர்கள் ஒன்று திரண்டு எழுந்தனரோயென எரிநட்சத்திரம் ஒன்று எகிறிக் குதித்ததோயெனப் பாய்ந்த ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


9. மைநாக மலையின் விருந்தை மறுத்து அங்கார தாரகையின் அடி வயிற்றைக் கிழித்தவனே சங்கர சொரூபனே ஏகாதச ருத்ரவீiரியனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே