பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13 சிம்சுவா விருட்சத்தில் சிறு வடிவில் இருந்தவனே பேருருக் காட்டி பிரமிக்கவைத்த பெரியோனே கணையாழி கொடுத்து சூடாமணி பெற்ற சிரஞ்சீவியே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


14 பிறவிப் பெருஞ்சிறையில் சிக்கித் தவித்த பிராட்டி அரக்கன் வெஞ்சிறையில் ஆவி துறக்க நினைத்தாள் அது நேரம் தடுத்து ஆண்ட தர்ம சீலனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


15. அசோக வனத்தை அழித்து அட்சயனைக் கொன்று இலங்கையை எரித்து நிகும்பலை வேள்வி மிதித்த இலட்சுமண ரட்சகனே அதிவீர பராக்கிரமனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே