பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 0. அனைத்துலக மனிதனே நோக்கி - * கையின் அடிப்படையான தத்துவத்தைக் தகர்த்து விடுகிருேம் என்று அவர்கள் கருதுகிருர்கள். வாழ்க்கைப் பந்தயத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் இறந்து வீழ்ந்து விடுவதுதான் புகழ் வாய்ந்த மரணம் என்றும் அவர்கள் கருதுகிருர்கள். மரணத்தைப் பற்றிச் சிந்திப்பதும் உலக கிலேயாமையைப் பற்றிச் சிந்திப்பதும் பொருத்தமற்றவை யென்று கருதி, தனது நம்பிக்கை முழுவதையும் இந்த உலகத்தின் மேலேயே செலுத்திய தல்ை, ஐரோப்பிய நாடுகள் ஓரளவு பயன் பெற்றனவென்பது உண்மைதான். விஞ்ஞானம் சொல்கின்றபடி வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமையுடைய பொருள்களே எஞ்சும் என்பதற் கிணங்க, அந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குரிய பயிற்சியை ஐரோப்பியர்கள் பெறுகின்ருர்கள். வாழ்க்கையின் முழு அர்த்தமும் இதுதான் என்று ஐரோப்பியர்கள் கினைப்பது போல் தெரிகிறது. இத்தகைய வாழ்க்கைத் தத்துவத்தால் நடைமுறைக்குக் கிடைக் கும் பயன் எதுவாக இருப்பினும், இந்த உலகத்தோடு நமக்குள்ள த்ொடர்பு கிலேயற்றது என்ற உண்மை மறுக்க முடியாமல் அமைந்து கிடக்கின்றது. மரணத்தைப் பற்றிச் சிந்திக்காமல், வாழ்க்கையில் திடமான நம்பிக்கை கொள்ளும்படி, ஏதோ ஒரு காரணம் பற்றி, இயற்கைச் சக்தியே கம்மைப் படைத்திருக்கிறது; என்ருலும், கம்முடைய உலக வாழ்க்கை முடியத்தான் செய்கின்றது. அன்றியும், இந்த உலகத்தில் நாம் செய்கின்ற எல்லாக் காரியங்களும் முடிவடையும் தறுவாயில், துண்டு துண்டாக அழிந்து போவதையும் காண்கிருேம். மிகப் பெரிய வளமான வாழ்க்கையும் ஒன்று மற்றுப் போகின்றது. மிகச் சிறந்த சாம்ராஜ்யங்களும் அவற்றின் உச்ச கிலேயில், கன வாய் மறைந்து விடுகின்றன. தானே விளங்கும் இவ்வுண்மையைத் திருப்பித் திருப்பிச் சொல்வதை நாம் விரும்பாவிட்டாலும், இதனை மறுக்க முடியாது. எனவே, வாழ்க்கையின் அடிப்படை:பாகிய மரணத்தோடு சேர்த்தே நம்முடைப் காரியங்களேயெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். - கம்முடைய உலக உறவுகள் எல்லாம் அழிந்து போகக்கூடியன வென்றலும், அவை கிலேத்திருக்கின்ற வரையில் அவற்றை நாம் ஒதுக்கிவிட முடியாது என்பதும் உண்மைதான். இவை இல்லே என்று கினைத்து காம் கடக்க முற்பட்டால், அவை விடாமல் தொடர்ந்து கின்று கம்மைப் பழி வாங்கி விடுகின்றன. நாம் ஏறிச் செல்கின்ற புகைவண்டி, காம் குடியிருக்கின்ற வீட்டைப்போல் எப்போதும் t -