பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

įv என நான் கூறியதை பவுண்டேஷன் கிறுவனத்தார் ஒப்புக் கொண் டனர். அந்த நிறுவனத்தார் அன்புடன் உதவிய 18,000 டாலர் கொண்டு இணைப்பு 1-ல் காட்டப் பெற்ற முறையில், பதிவு செய்யப் பெற்ற ஒரு கழகம் அமைக்கப் பெற்றது. தாகடர் கினைவு மலர் வெளியீட்டுக் குழுவின் சார்பில், நாங்கள், மூல மொழியில் தாகடரை நன்கு கற்ற நூறு பேர்களேச் சந்தித் - தோம். தாகரின் சிறந்த கருத்துக்களே வெளியிடும் முப்பது கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண் - டோம். அவர்களில் நாற்பது பேர்கள் எங்கள் விருப்பத்திற்கு இணங்கி விடையளித்தனர். அவர்கள் விடைகளுள் பெரும் பாலானவை ஒன்ருகவே அமைந்தன என்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களுடைய கருத்துக்களை ஒட்டிக் கழகத்தார் முப்பது கட்டுரை களேத் தேர்ந்தெடுத்து அவற்றை மறுபடியும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு செய்தனர். இக் கட்டுரைகளின் பட்டியல், இணைப்பு II-6ö கொடுக்கப் பெற்றுள்ளது. சிறந்த முறையில் ஆங்கிலம் எழுதும் இந்தியர்களுள் ஒருவராகிய ட்ாக்டர் பவானி பட்டாச்சாரி : யாவை மொழி பெயர்ப்புத் துறை மேற்பார்வைத் தலைமைப் பதவிக்கு நியமித்தார்கள். இந்த முறையில் கட்டுரைகளே முதல் தேர்வு. செய்தவர்கள் பட்டியலையும், மொழி பெயர்ப்பாளர் பட்டியலையும் இணைப்புக்கள் III, IV ஆகியவற்றில் காணலாம். பின்னர், இந்த முப்பது கட்டுரைகளில், மேனுட்டினரின் கவ னத்தை ஈர்த்து அவர்கள் மனத்தில் என்றும் கிலேக்கக்கூடிய 15 அல்லது 20 கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்குமாறு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள புகழ் பெற்ற அறிஞர்களைக் கேட்டுக் கொண்டோம். இவர்கள் அனைவரும் பல்வேறு அலுவல்களில் மூழ்கி, இருந்துங்கட்ட, நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, டைப் செய்யப்பட்ட 600 பக்கங்களைப் படித்துத் தமது கருத்தை, நான் குறிப்பிட்ட கால எல்லேக்குள், தந்தார்கள் என் பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது முன்னுரையையும் படித்து அதுபற்றியும் தம்முடைய சிறந்த கருத் துக்களைத் தெரிவித்தனர். அவற்றுள் பல இந்த முன்னுரையில் சேர்க்கப் பெற்றுள்ளன. அவர்களுடைய கருத்துக்களை ஆய்ந்த பிற்கு, தாகூர் கழகம் 18 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து இந்த மலராகத் தொகுத்துள்ளது. இம் முயற்சியில் ஒத்துழைத்த வெளி காட்டாரும், வங்காளிகள் அல்லாத இந்தியாவின் பிற பகுதிகளிலுள் ளாரும் நன்றிக்குரியவர்கள். நவீன ఇ–6ుత్ము இந்தியாவைப் பற்றி