பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அனைத்துலக மனிதனை நோக்கி ஒரு முறையாக நோக்குமிடத்து, பல்வேறு தலிைமுறைகளின் பிரதிநிதியாக, நான், என்னுடைய வாழ்க்கையில் அமைகின்றேன். மனித சமுதாயம் பல்வேறு தலைமுறைகளிலும் பெற்றுப் பெருக்கி வருகின்ற ஞான அனுபவங்களுக்கும், சக்திச் சேர்க்கைக்கும் என்னல் முடிந்த அளவு உதவுகின்றேன். அதே நேரத்தில், தனிப் பட்ட ஒரு மனிதன் என்ற முறையில், தொடக்கமும் முடிவும் கொண்ட ஒர் ஆன்மா என்ற நிலையில், அந்த எல்லையுடைய காலத் தில் ஒருவகையான குறிக்கோளே, முழுத்தன்மையை அடைய முயல்கின்றேன். முடிவிலாத இயக்கம் முழுத்தன்மையை அறிய முடி - யாது. இயக்கமே அதன் இயல்பு ஆதலால் ஒரு முடிந்த தன் மையை அதில் காண முடியாது. அந்த முடிவிலாத இயக்கத்தில், ஒரு கண நேரத்திற்கு அதன் ஒரு பகுதியாக அமைந்து, பிறகு மாய்ந்து விடுவது பயனற்ற ஒரு போராட்டத்தை நடத்தியதாகவே முடியும். இவ்வுலகம் என்பது அர்த்தமற்ற கேலிக்கடித்தாய், யாதொரு காரணமும் இல்லாமல் தொழிற்படுகின்ற ஒரு விளையாட்டு இட மென்று கருதுகின்றவர்கள், பேசுகின்றவர்கள், இந்த பைத்தியக் கார உலகம் அர்த்தமற்ற பணி புரிவதற்குத் தாங்களும் உதவியாக இருக்கின்ற முறையில் எதனையும் செய்யக் கூடாது. எல்லாப் பொருள்களின் உள்ளேயும் முடிவிலாத ஒரு வளர்ச்சி அமைந்து கிடப்பதால், அங்கு ஒரு கிறைவும் இருக்க வேண்டும். அதுவே இயக்கத்தின் பொருளாகும். அப்படி அமைந்திருக்கின்ற பயனே, தனிப்பட்ட ஒரு மனிதனே பல்லாமல் வேறு யார்தான் உணர முடியும்? எல்லேயுடைய பொருள்களில் ஏற்படுகின்ற இயக்கமும் அவனிடத்தில் உரிமை கொண்டாடுகின்றது. எல்லேயில்லாத பொருளில் கிடைக்கின்ற மன நிறைவும் தனி மனிதனிடத்தில் உரிமை கொண்டாடுகின்றது. அந்த உரிமைக்கு நாம் செவி சாய்க் கும் பொழுதுதான் மரணம் என்பது திடீரென்று நம் முன்னர்த் தோன்றி இவ்வுலகத்திலிருந்து கம்மைப் பிரிக்கின்ற பொருளாகக் - ) #5 o Q," $:శ్చి; .பகாபபதல்ல }۔ یه .FL}نتخ எனவே, புராதன இந்தியர்கள். மனிதனுடைய உலக வாழ்க்கையைப் பகுத்திருந்த முறையில், பணி அல்லது வேலை என்பது, அவ்வாழ்க்கையின் இடையே தோற்றுவதாகவும், விடுதலை என்பது அவ்வாழ்க்கையின் முடிவில் கிடைப்பதாகவும், அமைக் திருந்தன. ஒரு நாள் என்பது, எவ்வாறு காலே, மதியம், மாலை, இரவு என்று பிரிக்கப்பட்டுள்ளதோ, அதேபோல மனிதனுடைய வாழ்க் ល្ហុង ខសញ្ញៈ១-យ தேவையைப் பொறுத்து, நான்கு பகுதி