பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அனைத்துலக மனிதன. நோக்கி சகிப்புத் தன்மை காட்டவில்லை யென்ருல், நம்முடைய சக்தியில், காம் நிறைவேற்றியுள்ள முடிவுகளில் ஒரு வறுமை இருக்கிறதென் பதை உலகறியக் காட்டிவிடுவோம். காங்கிரஸ்-க்கும் மாநாட்டுக்கும் பிரதிநிதிகள் பொறுக்குவதற் குக் குறிப்பிட்ட விதிகள் எதனையும் நாம் இன்னும் ஏற்படுத்தவில்லை. மக்களிடையே ஒருவிதமான கவலையின்மை இருந்த வரையில் காங் கிரஸில் ஒருவித ஒற்றுமை கிலத்து வந்தது. ஏனென்ருல் நம் முடைய அரசியல் விருப்பம் எது என்பதைப் பற்றிக் கருத்து வேறு பாடு ஒன்றுமில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில் ஓர் அரசியலமைப் புத் தேவையென்ற கிலேமை ஏற்படவில்லை. ஆனல் இப்பொழுது நாட்டில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டபடியால் தேச சேவையில் அது செலுத்தப்பட வேண்டும். நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுப்பதற்கு மக்களின் சம்மதம் இன்று தேவையாக இருக்கிறது. உண்மையைக் கூறுமிடத்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ், அதனுடைய மாகாடு ஆகியவற்றின் நடைமுறைகள் பற்றியும், நடைமுறை விதிகள் வகுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. - - - இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு, காட்டிலுள்ள பல்வேறு கட்சிகளும் தனித்தனி முறையில் ஜாதி அடிப்படையில் கழகங் களே’ அமைக்கத் தொடங்குமேயானல் காங்கிரஸ் அதனுடைய உண்மையான தன்மையை இழந்துவிடும். நாடு முழுவதிலும் வாழ் கின்ற மக்களினுடைய ஒருமித்த மனப்போக்கைப் பிரதிபலிப்பதாக இருந்தால்தான் காங்கிரஸ் வாழ முடியும். கருத்து வேறுபாடு தோன்றியவுடனேயே அனைத்தையும் தழுவிக்கொள்ளும் இயல்பை விட்டுவிடுவோமேயானல், நமது உறுப்பினர்களே அதிகப்படுத்து வதனுல் ஏற்படப் போகின்ற பயன்தான் என்ன ? . வங்காளத்தைத் துண்டாடுவதைப் பற்றி நாம் பெரிய தொரு போராட்டம் நடத்தினுேம். இப்போது தலைதுாக்கி நிற்கின்ற உட் பிளவுகளேப் போக்குவதற்குப் பெரிதும் முயலவேண்டும். ஒன்றும் தெரியாதவர்களின் எதிரே கோழையாக கடந்துகொள்கின்ற ஒரு வன், அதற்கு ஈடு செய்யும் முறையில், தன் சுற்றத்தாரின் எதிரே குருட்டுத்தனமாக கடந்துகொள்ளத் தேவையில்லே. வெளிகாட்ட வர்களால் கொண்டுவரப்பட்ட பிரிவினை ஒரு காயத்தை உண்டாக்கு வது உண்மைதான் ; ஆளுல் காமே ஏற்படுத்திக்கொள்ளும் உட் பிளவு பெரிய பாவமாகும். அந்தப் பாவம் நம்முடைய மனத்தின்