பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை 夏 I 5 ஆழத்துள் புகுந்துவிடுகின்றது; பெருந் துன்பத்தை அனுபவிப்பதன் மூலந்தான் அதைப் போக்க முடியும். விடுதலையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிருே மோதலால், நம்மை நாம் மறந்துவிடக் கூடாத ஒரு சூழ்நிலையில் கின்றுகொண்டிருக்கிருேம். குறிக்கோளை நோக்கிச் செல்லும் நம்முடைய போக்கைத் தடை செய்கின்ற முறையில் பற்பல ஆசைகள் காட்டப்படுகின்றன. இந்த ஆசைகளுக்கு இடம் கொடுத்தால் குறிக்கோளே இழந்து விடுவோம். நம்முடைய சகோ தரர்களே எதிர்த்து ஓங்கப்படும் கைகளைத் தடுத்து, அவ்வாறு ஓங்கு வதற்குக் காரணமான கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இத்தகைய கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நம்முடைய சுற்றத்தார்களே மறுபடியும் மன்னிக்க வேண்டும். ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மை இன்மையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளேயும், சிறு பூசல்களையும் உடனே சரி செய் தாக வேண்டும். நெருப்பு கம்முடைய வீட்டையும் பற்றிக் கொண்டது. இந்த நேரத்தில், எதிர்த்து நிற்கின்ற பிற கட்சிகளும், கோப வார்த்தைகளே வீசுவதன் மூலம் நெருப்பை ஊதிவிடத் தொடங்கினல், அது பெரு நெருப்பாக மாறிவிடும் என்பதை மறந்து விடக் கட்டாது. பிரிவினை என்ற வாளாயுதம் காட்டின் மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஆகிய நாம் பல நூற்ருண்டுகளாக இதே தாய் காட்டால் ஊட்டி வளர்க்கப்பட் டோம் என்ருலும், இன்றுங்கட்ட, கம்மிடையே எவ்வளவு வேறுபாடு இருந்து வருகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற குறைபாடுகளைக் களைக்தெறிந்தாலொழிய, கம்முடைய அரசியல் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் புதிய புதிய முட்டுக்கட்டை கள் தோன்ற ஆரம்பித்து, நம்முடைய பெரும் கனவு எதனையும் நிறைவேற்ற முடியாத நிலைமைக்கு வந்து விடுவோம். ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கு மிடையேயுள்ள முரண் பாட்டை வெளியார்கள் பயன்படுத்திக்கொள்ள முயல்வாக்கள் என்பதைப் பற்றி காம் அஞ்ச வேண்டியதல்ல. நம்முடைய உட் பிளவுகளைச் சரிசெய்துக்கொள்ளக் கூடுமேயாளுல், நம் ஒருவர் மேல் ஒருவரைத் தூண்டிவிடும் எல்லாவித முயற்சிகளையும் பார்த்து நாம் அனைவரும் சிரிக்க முடியும். அத்தகைய முயற்சிகள் வருங் - காலத்தில் மறைந்துவிடும். வேற்றுமை யுணர்ச்சியைத் தூண்டி,