பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vị விஸ்வபாரதிக்கும், இக் கட்டுரைகளே ஆங்கிலத்தில் மொழி பெயர்த் துக் கொள்ள உரிமை வழங்கிய தாகூரின் நூல்கள் உரிமையாள ருக்கும் கழகம் கடமைப்பட்டுள்ளது. முதல் தேர்வாகிய முப்பது கட்டுரைகளைத் தந்தவர்கட்கும், மொழி பெயர்ப்பாளர்கட்கும், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஒத்துழைத்தவர்கட்கும், கழக அங்கத்தினர்கட்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றி உரியதாகும். ஓரளவு பொறுமையைச் சோதிப்பதும், ஆளுல் இன்றியமையாததுமான கட்டுரைகட்குக் குறிப்புத் தயாரித்தல், தட்டெழுத்தில் அச்சிடல் முதலிய வேலை களைச் செய்து கொடுத்த சாக்தி நிகேதனத்தைச் சேர்ந்த பூதி கிருஷ்ண ராய்க்கும், கல்கத்தா தேசீய நூலகத்தைச் சேர்ந்த பூரீ கேசவனுக்கும், அவரைச் சேர்ந்தவர்கட்கும் சிறப்பான முறை யில் நன்றி தெரிவிக்க வேண்டும். போர்ட் பவுண்டேஷனின் இந்தியக் கிளையின் பிரதிநிதியாகிய டாக்டர் டக்ளஸ் என்ஸ்மன்ஞருடைய தூண்டுதல் இல்லையானுல் இத் திட்டத்தை இவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியாது ஆகலின் அவருக்கும் சிறப்பான முறையில் நன்றி உரியது. மேலும் டாக்டர் பவானி பட்டாச்சாரியா என்னுடன் இருந்து ஒவ்வொரு கட்டுரையையும் படித்துப் பார்த்து, ஆங்கில மொழி பெயர்ப்பு, தாகடரின் உள்ளக் கருத்தோடு பொருந்தி இருக்கும் முறையில் பணி புரிந்ததையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். என்னுடைய உதவிக் காரியதரிசி நீ ஆர். என். ராயும் ஓய்வு நேரங்களில் கட்டுரைகளுக்கும், முன்னுரைக்கும் வடிவு கொடுக்கும் பணியில் உதவினர். மூன்று கண்டங்களிலும் இக் நூலே மிகக் குறுகிய காலத்தில் வெளி வருமாறு உதவிய ஆசியா வெளியீட்டக நெறியாளர் நீ ஜெயசிங்கே அவர்களையும், பூ சரஸ் வதி அச்சகத்தைச் சேர்ந்த நீ சைலேந்திர நாத் குஹா ராய் அவர்களேயும் குறிப்பிட வேண்டும். - இறுதியாகக் கவிஞரின் மகளுர் நீ ரதீந்திர நாத் நூல் வெளியீட்டால் பெறும் ராயல்டி உரிமைத் தோகை அதை தையும் விஸ்வபாரதியில் பயிலும் வாங்காளி மொழியைத் தாய் மொழியாகப் பெறுத காகர் மாணவர்கட்குப் பரிசாகவோ, உப

காரச் சம்பளமாகவோ வழங்குமாறு அன்புடன் உதவியதற்குக் கழகம் தன் கன்றியைச் செலுத்த விரும்புகிறது. புது டில்லி, - - - 7–5–1961 ஹுமாயூன கபீர்.