பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை - # 1 9 மக்களிடத்திலும் அதற்கேற்ற ஓர் எதிர்ச் செயலே உண்டாக்கி விடாதா? அப்படித் தோன்றுகிற எதிர்ச்செயல் வெறும் வருத் தத்தைத் தெரிவிப்பதாய், சாத்வீகமானதாய்த்தான் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? - இயல்பாகத் தோன்றுகின்ற இந்த எதிர்ச் செயலைப் பற்றி அதி காரிகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அதற்குபதிலாக அவர் களுடைய அடக்குமுறைகள் இன்னும் அதிக உச்ச நிலையை அடைந்தன. தாங்கள் உண்டாக்கிய அலைகளேத் தடுப்பதற்கு, மேலும் அடுத்து அடுத்து அலைகளே உண்டாக்குகிருர்கள். இத் தகைய ஒரு செயல் அவர்களுடைய அதிகார எல்லையைக் காட்டு கிறதே தவிர அறிவு எல்லையைக் காட்டவில்லை. அதனை எதிர்ப்பதற் குரிய வன்மையும், சக்தியும் இல்லாதவர்களாக நாம் இருக்கலாம். ஆல்ை ஆண்டவனுல் படைக்கப்பட்ட கமது இருதயம் ஒரு பிடி மண்ணுல் செய்யப்பெற்ற தன்று. திடீரென்று தாக்கப்பட்டால் காம்கட்ட ஓர் எதிர்ச் செயலில் ஈடுபடுகிருேம். இப்படி எதிர்ச் செயலில் ஈடுபடுவதை மறிவினைச் செயல் (Reflex action) என்று சொல்வார்கள். இந்த எதிர்ச் செயலே அவர்களுக்குக் காட்டப்படும் அவமரியாதை என்று கருதுவார்களேயானுல் அவர்கள் செய்த செயல்களின் விளைவுதான் இது என்பதை அவர்கள் மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் இரண்டையும் கூட்டி விட்டு முடிவு நான்காக ஆகும்பொழுது அதன் பேரில் கோபங் கொள்வது தவறு. - - ஆட்சியாளர்கள், சட்டத்தைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, மேற்கொள்ளும் செயல்களாகக் சிறைக்கடம், அடக்குமுறை, அடித்துத் துன்புறுத்தல் ஆகியவை அமைந்துள்ளன. இதற்கு எதிராக,ஆளப்படுகின்ற மக்களோ என்ருல், வெறுப்பின்.எல்லேயில் இருக்கின்ருர்கள். இது வரையில் மக்களுடைய காக்கின் நுனியிலே மட்டும் கின்று வந்த வெறுப்புணர்ச்சி கொஞ்சங் கொஞ்சமாக அவர் களுடைய குருதியில் கலக்கத் தொடங்கிவிட்டது. மக்கள், அதி காரத்தின் கொடுங்கோன்மைக்கு எதிரே பணிந்துபோகாமல் புரட்சி செய்வார்களேயானுல் அது பெரும் தொல்லையில் கொண்டு விட்டு விடலாம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். என்ருலும் இத்தகைய நிகழ்ச்சிகளில்கூட ஒரு கம்பிக்கை இருக்கக் காண் கிருேம். நம்மைப் பொறுத்தமட்டில் நம்முடைய சக்தியும் செத்துவிட வில்லையென்பதையே அது அறிவிக்க விரும்புகின்றது. பல நூறு