பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1so - அனைத்துலக மனிதனே நோக்கி நாட்டின் ஆசிர்வாதம் முழுவதும் கிடைப்பதாக. ‘விடியற்கால நேரத்தில் எழுந்து, அன்றைப் பகல் வேளையில் ஏற்படக்கட்டிய எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ள, அனைவருக்கும் முன் னரே எழுந்து வந்திருக்கிறீர்கள். உங்களுடைய ஆண்மை, போர் முரசொலியில் மட்டுமல்லாமல் வறண்ட பூமியில் பெய்கின்ற கருணை மழையிலும் விளங்குகின்றது. கீழே தள்ளப்பட்டு, மிதிக் கப்பட்டு, பிறருடைய பழிச் சொல்லுக்கும், எள்ளலுக்கும் கிலேக் களமாய் தம்முடைய குடும்பத்தை யல்லாத பிறரிடமிருந்து எந்த விதமான மரியாதையையும் எதிர்பார்ப்பதற் கில்லாதவர்களாய், மனிதர்கள் என்ற முறையில் தங்களுக்குக் கிடைக்கின்ற உரிமை க2ளக் கடட அறியாதவர்களாய் வாழ்கின்ற மக்கள், உங்க ளுடைய தூண்டுதலினலே மனித சகோதரத்துவம் என்ருல் என்ன வென்பதை அறிந்து கொண்டிருக்கிருர்கள். இன்று உங்களிடத்தில் இயல்பாக அமைந்துள்ள சக்தி அன்பாகப் பரிணமித்திருக்கின்ற காரணத்தால், வேற்றுமைத் தடைகளை உடைத்துத் தள்ளிப் பாலவனம் சோலேவன மாகின்ற கிலை ஏற்பட்டு விட்டது. ஏனென்ருல் யாருக்கும் ஆண்டவன் தன் கரு:னயை மறுப்பதில்லை. ' பகீரதனுடைய' தவம் கங்கா தேவியை மேலேயிருந்து கொண்டுவந்து, அவனுடைய முன்னேர் களின் சாம்பலின் மேல் பாயச் செய்து மீண்டும் உயிர் பெறுமாறு செய்தது”போல உங்களுடைய முயற்சிகள் புதிய இந்தியாவுக்குப் புத்துயிரை ஊட்டுகின்றன. எப்படிக் கங்கையின் போக்கை, இந்திரன் யானையாகிய ஐராவதமும் தடுத்து நிறுத்த முடிய வில்லையோ, அதுபோல இந்த முன்னேற்றத்தையும் யாரும் தடுத்து கிறுத்த முடியாது. இந்தியாவின் விதியை முடிவு செய்கின்ற ஆண்டவனே அனுப்பிய தூதுவர்களாக இன்று உங்களைக் காண் கின்றேன். இதே நேரத்தில் நாட்டு சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுதல் என்பது அர்த்தோதய திருவிழாவில் ஆற்றில் ஒரு முறை மூழ்கி எழுந்திருப்பது போல ஒரு வினுடியில் அல்லது ஒரு நேரத்தில் முடிந்து போகின்ற காரிய மன்று என்பதை உங்களுக்கு கினைவூட்ட விரும்புகிறேன். திக்கற்ற இந்தியக் குழந்தைகள் அனுபவித்த துன்பமும், கொடுமையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்தவையல்ல. அவர்களுடைய முயற்சி யில்லாமல் உங்கள் முயற்சியால் மட்டும் அவர்களே நீங்கள் காப்பாற்றிவிட முடியும் என்று கினைந்துவிட வேண்டா.