பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அனைத்துலக மனிதனை நோக்கி - c காங்கிரஸில் பாயும். அப்போதுதான் பல்வேறு இரத்த நாளங்களின் வழியே நல்ல இரத்தம் ஓடி, இந்தியாவின் இருதயம் என்றும், அதன்' உயிர்த் துடிப்பின் அடையாளம் என்றும் சொல்லக்கூடிய நிலையைக் காங்கிரஸ் பெற முடியும். இந்தத் தலைமை உரையில் நடைமுறை நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்ற எந்த ஒரு விஷயத்தையும்பற்றி நான் குறிப்பிட வில்லை. ஆனல் நாட்டுப் பணியில் நம்முடைய கடமைகள் எவையாக இருக்க வேண்டுமென்ற அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி ஒருவாறு எடுத்துக் காட்டியுள்ளேன். இவற்றைக் குறித்து மறு படியும் உங்கள் முன்னர்க் கடற விரும்புகிறேன் ...— - (1) (2) (3) நவீன யுகத்தின் தேவைகளையும், நம்முடைய சமுதாய நிலைமைகளையும் ஒற்றுமைப்படுத்தினலொழிய, நாம் இருளில் தள்ளப்படுவோம். நிறுவுதல், ஒற்றுமைப்படுத்தல், ஒன்ருக்கல் என்பவைதாம் இன்று நம்முடைய தாரக மந்திரம். தனிப்பட்ட மனிதர்கள் பலர் கட்டிய தொகுப்பில் பல நற்பண்புகள் காணப்படலாம். ஆல்ை, ஒழுங்கு முறை யில் நிறுவப்பெற்றுள்ள ஒரு மக்கள் கூட்டத்தோடு இத் தொகுப்பு கின்று போராட முடியாது. எனவே உயிர் பிழைக்கும் போராட்டத்திற்கு நம்முடைய கிராமங்களைத் தயார் செய்ய வேண்டும். மரணத்தை நோக்கி அவர் களைச் செலுத்திக் கொண்டிருக்கின்ற பிரிவினை உண்ர்ச்சியை ஒரே அடியாக ஒழிக்க வேண்டும். நம்முடைய தேசீய விழிப்பு மனப்பான்மை நாடு முழுவதும் ஒரே அளவில் பரவியுள்ள தென்று கடறுவதற்கில்லை. ஓர் உறுப்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்ற அந்த நேரத்தில் மற்ருெரு பகுதி வாடி வதங்குகின்றது. - கற்றறிந்த கூட்டத்தாரும், பொதுமக்கள் கூட்டமும் வெவ்வேறு பிரிந்து கிற்பதளுல் தேசீய ஒறறுமை என்பது கிடைக்காத பொருளாக இருக்கின்றது. தேசீய விழிப்பு மனப்பான்மை, அதில் ஏற்படுகின்ற ஒற்றுமை ஆகியவை, விவகார மூலமாகவோ புத்திமதிகள் மூலமாகவோ கிடைப்பதற்கில்லை. கற்றறிந்த கூட்டத் தாரும் பொது மக்களோடு ஒன்று சேர்ந்து ஒற்றுமை யுல் ஆச்சியுடன் ஒரே வேலைத் திட்டத்தில் ஈடுபடும் பொழுதுதான் சகோதரத்துவ மனப்பான்மை நாடு முழுவதிலும் பரவும்.