பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அனைத்துலக மனிதனே நோக்கி களாகக் கொடுக்கல், வாங்கல் எதிலும் பங்கு கொள்ளாதவர்கா, இருப்போமேயானல் அது இந்திய வரலாற்றையே வறுமையுடைய தாகச் செய்துவிடும். (~ - - ஆகவேதான், நவீன இந்தியாவிலுள்ள மிகப் பெரியவர்கள் கிழக்கையும், மேற்கையும் ஒன்ருக்கும் பணியைத் தங்களுடைய வாழ்க்கைப் பணியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உதாரனம், ராம் மோகன்ராய்' வாழ்ந்தார். மனித சமுதாயம் என்ற அடிப் படையில் அகில உலகத்தோடு இந்தியாவும் ஒன்றுபட வேண்டும் என்ற கொள்கையை அவர் ஒருவராக கின்று எடுத்துக் கூறினர். எந்த ஒரு குருட்டு நம்பிக்கையும், எந்த ஒரு பழக்க வழக்கமும் அவருடைய இந்த உயர்ந்த காட்சியை மறைக்க முடியவில்லை. ஒரு விரிந்த மனப்பான்மையில், ஒரு பரந்துபட்ட அறிவில் கிழக்கை; தியாகம் செய்யாமலேயே அவர், மேற்கை ஏற்றுக் கொண்டார். அதன் மூலமாகத் தனி மனிதனுக கின்று புதிய வங்காளத்தை உண்டாக்கினர். சுதந்திரத்தை நோக்கிச் செய்யப்படுகின்ற முயற். சியில் நமக்குள்ள தள்ளமுடியாத உரிமையை நிலைநாட்டுவதற்காது அவர் பிரிட்டிஷாரால் வேட்டையாடப்படக் கூடிய கிலேயில் இருந் தார். நமக்கும் இந்த உலகம் சொந்தம் என்பதை நமக்கு உணர்த் துவதற்காக அவர் பாடுபட்டார். அவர் ஒருவர் மட்டுமே, புத்தரும் ஏசுவும் முகம்மதுவும் நமக்காகவே வாழ்ந்தார்கள் என்பதையும் நம் முடைய பழைய ஞானிகள் கண்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நம் ஒவ்வொருவருக்கும் உரிமையுடையவை என்பதையும் முதன்முத லில் எடுத்துக்கடறினர். மேலும் மெய்யுணர்வுப் பாதையிலுள்ள தடங்கல்களே யெல்லாம் யார் நினைக்கின் ருர்களோ, மனிதனுடைய சக்தி தடைப்பட்டு கிற்பதை யார் விடுவித்தார்களோ, அவர்கள் கம்மவர்கள் என்ற முறையில் அவர்களோடு உறவு கொண்டாடி, அவர்களுடைய புகழில் நாம் பங்குகொள்ள வேண்டு மென்பதையும் அவரே முதன் முதலில் எடுத்து கூறினர். இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்குமிடையில் ராஜாராம் மோகன் ராய் அமைத்த பாலம் இன்று வரையில் கிலத்திருந்து நமது ஆக்ச வேலைகளுக் கெல்லாம் ஒரு துரண்டுகோலாக இருந்து வருகிறது காலத்தின் போக்கை அவர் சரியாக உணர்ந்து கொள்வதை எந்தப் பழமையான குருட்டு நம்பிக்கையும், கர்வமும் தடை செய்ய வில்லை. காலம் என்பது பழமையிலேயே கின்று விடுவ தன்று xےچ என்பதையும், எதிர் காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற - r தென்பதையும் அவர் கன்கு அறிந்திருந்தார். .