பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முன்னுரை மாக அரச குமாரர் என்று அழைக்கப்பட்டார். 'மேகுட்டுக் கல்வியைப் பரப்புவதில் ராம் மோகன் ராயுடன் சேர்ந்து அவரும் பெரும் பாடுபட்டார். தாகூரின் தந்தை கால நேரத்தில் உபநிஷ தங்களையும் ஹபீசையும் பாராயணம் செய்தார்' என்று சொல்லப் படுகிறது. அவருடைய பக்தி, நம்பிக்கை என்பவை காரணமாக அவரை மகரிஷி என்றே அழைத்தார்கள். ராமமோகன் ராய்க்குப் பிறகு அவரே பிரம்ம சமாஜத்தின் மிக முக்கியமான தலைவரானர். உபநிஷத ஐதீகங்களிலும், இஸ்லாமிய ஐதீகங்களிலும் மூழ்கி இருந்தமையின் தாகூர் குடும்பம் மேனுட்டுக் கல்வி, வாழ்க்கை முறை இவற்றைப் பின்பற்றும் முதல் தலைமுறையாரில் முத்லா வதாக விளங்கிற்று. வாழ்க்கையைப் பற்றித் தாகூர் கண்ட முறையில், ஐதீகமும், பரிசோதனையும் கலந்திருந்த சிறப்புக்குக் காரணம் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட சூழ்கிலேயே யாகும். தாகூர் பிறப்பதற்கு முன்னரே மூன்று தலைமுறைகளாக, மிகச் சிறந்த வன்மையுடைய வர்கள் அக் குடும்பத்தில் தோன்றி இருந்தனர். சிறந்த புகழையும் நல்ல செல்வத்தையும் பெற்றுத் திகழ்ந்தாலும், பிராம்மணர்களால் துாற்றப் பெற்றுவந்தது அக் குடும்பம். தாகூர் குடும்பத்துடன் உணவு கொள்வது சமுதாய வெறுப்பையும், அவர் குடும்பத்தில் திருமண சம்பந்தம் வைத்துத் கொள்வது ஸ்ளுதனிகளின் விரோ தத்தையும் உண்டாக்கிற்று. தம்முடைய செல்வ கிலேயையும், அறிவுத் திறத்தையும் நன்கு உணர்ந்திருந்த அக் குடும்பம், அன்று கிலத்திருக்த சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் வாழ்ந்தது. அன்றிருந்த மரபுக்கு விரோதமாகத் தாகடரின் பாட்டனர் இங்கிலாந்துக்குச் சென்று வந்தார். பிரம்ம சமாஜக் கொள்கைகளேப் பரப்பியதால், லஞதனக் கொள்கைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களின் தலைவராக இருந்தார். தாகூரின் மூத்த சோதரர் சத்திபேந்திர ராத், இந்தியன் சிவில் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியராவார். பெண்கள் உடை விஷயத்தில் சத்தியேந்திர நாத்தின் மனைவியார் மேற் கொண்ட முறையே வங்காளம் முழுவதும் பரவி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விரிந்து சென்றது. ராம் மோகன் ராயின் பிரம்ம சமாஜக் கருத்துக்களே எவ்வளவு அதிர்ச்சியுடன் ஹிந்து சமுதாயம் ஏற்றுக் கொண்டது என்பதை இவ்வளவு காலத்துக்குப் பிறகு நாம் சரியாக அறிய முடியாது. பல நூற்ருண்டுகளாக, முதலில் இஸ்லாத்தாலும், பிறகு கிறிஸ்துவ - - J 3.