பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் - 157 அவர்களுடைய நாட்டிலும்கூட மக்களின் தாழ்ந்த இயல்பு கன அடி பணியச் செய்து, சிறந்த பண்பாடுகளைத் தூக்கிவிடக் கடிய நிலையில் சமுதாயச் சக்திகள் ஓயாமல் பணி புரிகின்றன. இங்குள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனையும் ஒர் உயர்ந்த படியில் ஏறி நின்று அதே இடத்தில் கிலக்குமாறு அவனுடைய சமுதாய இமனச்சான்று ஓயாது விரும்புகிறது. ஆளுல், இந்தியாவிலுள்ள ஆங்கிலேயன் அந்தச் சமுதாயத்தில் உள்ளவன் அல்லன். அதற் குப்பதிலாக ஆட்சிப் பணியிலோ (சிவில் சர்வீஸிலோ) அல்லது ல்ாணிக இனத்திலோ அல்லது போர்ப் படையிலோ அவன் ஓர் உறுப்பினனுக இருப்பதால், இந்த ஒவ்வோர் இனத்தின் குறுகிய காக்கையும், குறிப்பிட்ட மரபையும், கடைமுறைக் கொள்கை இக்ளேயும் அவன் பெற்றுள்ளான். எனவே, அவன் கட்டுப்பாட் டோடு கூடிய ஆட்சி அதிகாரியாகவோ, அல்லது நல்ல வாணிக ளுேகவோ, அல்லது முழுவதும் போர் வீரனுகவோ ஆகிவிடுகிரு தை ல் அவனிடத்திலுள்ள மனிதத் தன்மை மறைந்து விடுகிறது. அதன் எதிரே, அந்த ஆங்கிலேயன் தொடர்பு கொள்ளக்கூடிய இந்தியாவின் வீட்சியடைந்த நிலை, அந்த ஆங்கிலேயனுடைய நல்ல இயல்புகளைத் தூண்டக் கூடியனவாகவும் இல்லை. ஆகவே இரு வருமே நஷ்டம் அடைகிருர்கள். நாமும், சிறந்த ஆங்கிலேயனேச் சக்திக்காமல், கோளாறுபட்ட் பிம்பத்தையே சந்திக்கிருேம். ஆகையால் நமக்கு ஏற்படுகின்ற பழிச் சொற்களும், துன்பங்களும் இதன் பயனுய் விளைகின்றன.

தியாகம் பணி ஆகியவைதாம், சக்தியின் அடிப்படையாக அமைய முடியுமே தவிரக் கடுமையான வார்த்தைகளும், இம்சைக் செயல்களும் அவ்வாறு அமைய முடியாது. நாட்டின் நன்மைக் காக நம்முடைய சக்தி முழுவதையும் செலவழித்து, இந்தியாவை கம்முடையதாக ஆக்கிக்கொள்ளும்பொழுதுதான் இந்தியாவிலுள்ள ஆங்கிலேயர்கள் நாம் சொல்கின்றபடி நடக்கக் கடமைபடுவார்கள். என்று வரை நம்முடைய சகோதரர்களிடத்தில் தனிப்பட்ட முறை யிலும் சமுதாய முறையிலும் தாழ்வாக நடந்துகொள்கிருேமோ, * வறு வரை கிலச்சொந்தக்காரர்கள் அவர்களிடம் பணியாற்றும் அழைப்பாளிகளைத் தங்களுடைய சொந்த உடைமயாகக் கருது கின்ருர்களோ, என்று வரை இளைத்தவர்களைத் தள்ளி மிதிப்பதைத் தங்களுடைய உரிமை யென்று வலிமை புடையவர்கள் கினைக் கின்ருர்களோ, என்று வரைத் தாழ்ந்த வகுப்பினரை விலங்குகளே விடக் கேவலமாக உயர்ந்த வகுப்பினர் கடத்துகின்ருர்களோ