பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 182 அனைத்துலக மனிதனை நோக்கி இந்தத் தூசிப் படலத்தின் அப்பாற் காணப்படும் அவர்கள் கண்டு கொள்ளாமல் இல்லை. ஐரோப்பாவில் மட்டும், உண்மைகள், அனைவரும் கண்டு கொள்ளும்படி வெளிப்படையாக உள்ளன என்று கூற வரவில்லை. அங்கும் அவை மறைந்துதான் கிடக்கின்றன. என்ருலும் உடைந்த சமான்களின் அடியில் மறைந்து கிடக்காமல், அழகிய படுதாக்களிள் பின்னர் மறைந்துள்ளன. அதன் காரணமாக, அவற்றைக் கண்டுகொள்வது இன்னும் கடினமாகவும் இருக்கலாம். கற்கள் பதிக்கப்பெற்ற அந்த அழகிய திரைச் சிலையைப் பார்த்து விட்டுக் கண் கூச்சமடையும்பொழுது அதுவே மேனுட்டின் மிக உயர்ந்த, காண வேண்டிய பொருள் என்று கினைத்து ஏமாந்தும் விட லாம். அந்தத் திரைச் சிலையின் பின்னர் உள்ள தெய் வத்தைக் கண்ணெடுத்துப் பாராமலும் வந்துவிடலாம். கற்கள் பதித்த அந்தத் திரைச் சிலேதான் அங்கே இருக்கிறது என்ற எண்ணத்துடனேயே செல்வதானல், அந்தப் பயணம் முற்றிலும் பயனற்ற ஒன்ருகும். ஐரோப்பிய நாகரிகம் உயிரற்ற உலகாயாதமான ஒன்று என்ற அவச் சொல், இன்று பலரிடையேயும் வழங்கி வருகிறது. அவ்வாறு கூறுவதற்கு ஆதாரமே தேவைப்படுவதாகத் தெரியவில்லை. சிலர் கறுவதை மற்றவர் அப்படியே எதிரொலிக்கின்றனர். இவ்வாறு கடறும் ஆட்களின் அதிகப்படியான எண்ணிக்கை காரணமாக, அதுவே போற்றப்படும் மெய்மையாகி, அறிவால் ஆராயப்பட்ட உண்மையின் ஸ்தானத்தைப்பெற்றுவிடுகிறது அந்த அவச் சொல். எங்கேயாவது சிறிதளவு நன்மை காணப்பெற்ருல், அதன் அடிப்படையில் ஆன்ம பலம் இருந்தே தீர வேண்டும் என்பதை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்ருல், ஆன்மாவின் மூலங்தான் உண்மையை அடை முடியுமே தவிர, எவ்வளவு பலம் பொருந்திய யந்திரமாக இருப்பினும் யந்திர சாதனத்தின் மூலம் உண்மையைக் காண முடியாது. ஐரோப்பாவில் ஏதாவது முன் னேற்றம் இருப்பதாக நாம் கண்டால் அதன் அடிப்படையில் ஆன்ம பலம் இருக்கிறதென்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை யாகும். செத் தொழிந்த சடப் பொருள் முன்னேற்றத்தைத் தராது. உலகாயதப் பொருள்களிற்கட்ட ஆன்ம பலந்தான் வெளிப்பட்டுத் தோன்றுகிறது.