பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்ள்ை ,置&5 அச்சமூட்டும் வகையில் இச் செயல் அதிகப்படுத்துகிறது. அந்த இடங்களில் பல படகுகள் துன்பமடைவதை கானே கண்டிருக் கிறேன். இரண்டு கழிகளின் இடையேயுள்ள குறுகிய பகுதியில் செல்லுகையில் ஒர் ஆபத்தான இடத்தில் என் படகு சிக்கிக் கொண்டது. சில கஜ தூரத்தில் செம்படவர்கள் இருப்பினும், நாங் கள் உதவிக்கு அழைத்ததை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. என்னுடைய படகோட்டிகள் வெகுமதி தருவதாகக் கூறியபொழுது கூட வெகுமதித் தொகையை உயர்த்துவதற்காக அவர்கள் காது களில் எங்கள் கூப்பாடு விழாததுபோலப் பாவனை செய்தனர். ஆனலும், எங்கள் படகு இக்கட்டில் சிக்கிக் கொள்ள அவர்கள் கட்டிருந்த கழிகளே காரணம். எங்கள் வெகுமதித் தொகை கணிசமாக உயர்த்தப்பெற்றவுடன் திடீரென்று அவர்களுடைய காதுகள் கேட்கும் சக்தியைப் பெற்று விட்டன. சில நாட்கள் முன்னர் போல்பூர் கடைத் தெருவில் தீப் பிடுத்துக் கொண்ட நிகழ்ச்சி உங்கட்கு நினைவிருக்கலாம். அப் பொழுது. கான்கு ஆப்கானியர்கள்தாம் நெருப்பை அணைக்க உதவினர்களே தவிர, பக்கத்தில் வாழ்ந்த மக்கள் அல்லர். உண் மையைக் கூறப்போல்ை, அவர்கள் தம்முடைய தண்ணிர்க் குடங் களைக்கூடக் கொடுக்க மறுத்து விட்டனர். ஏன் தெரியுமா ? ஆப்கானியர்கள் தொட்டுவிட்டால் அக் குடங்கட்குத் தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம் ! எல்லாக் காலங்களிலும் இப்படிப்பட்ட ஆன்மீக வறுமையைப் பார்த்துக் கொண்டே இருக்கிருே மாகலின் இதுபற்றிய உதாரணங் களே அடுக்கிக் கொண்டே போக வேண்டிய தில்லை. தற்காப்பு என்ற முறையில் எதனைக் கூறினலும், இது பண்பாடற்ற செய்கை என்பதை நம் உள்ளம் நன்கு அறியும். தன்னல மின்மை என்ற பண்பிற்கும், ஆன்மீகத்திற்கும் உறவே இல்லாமற் போய்விட்டதா? உலகத்திலிருந்து ஒதுங்கி கின்று, மறைவான இடத்தில் அமர்ந்து ஆண்டவன் பெயரை முணுமுணுப்பதுதான் ஆன்மீகம் என்பதா? மக்களேத் தைரிய முடையவர்களாகச் செய்வது ஆன்ம பல மல்லவா ? டைடனிக்’ என்ற கப்பல் மூழ்கிய தருணத்தில், ஆண்களில் ஒரு கூட்டத்தார், மரணத்தின் எதிரே நிற்பதைக் காண்கிருேம். மரணம் அவர்களே எதிர்ப்பட்ட அந்த நேரத்திலும் அவர்களேச் சுற்றி ஒர் ஒளி பிரகாசிக்கிறது. தனிப்பட்ட எந்த ஒரு மனிதனுடைய சிறப் பான மனத் திடத்தையும் இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டவில்லை.