பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அனைத்துலக மனிதனை நோக்கி இதில் மிகவும் அதிசயக்கத்தக்க கிலை என்னவென்ரூல், தங்களே உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு செல்வச் செருக்கில் வாழ்ந்த செல்வந்தர்கள் பலர், தம்மைத் தியாகம் செய்து கொள்ளத் தயாராக இருந்ததுதான். அவர்களாகவே விரும்பி ஒதுங்கிக் கொண்டு வலிமை யற்றவர்கட்கும், உடல் ஊனம் உடையவர்கட்கும் முதலிடங் தந்தனர். திடீரென்று தோன்றுகிற பேராபத்து, மனிதனுடைய மிருக இயல்புகளைக் கிளப்பி விட்டு, நாகரிகத்தில்ை அவன் பெற்ற கட்டுப் பாட்டைத் தகர்த்து விடுகிறது. நின்று கினைப்பதற்கு நேரமிருக் தால் தன்னடக்கம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு உண்டு. அந்த கடு கிசியில், டைடனிக் கப்பலில், சிலர் ஆழ்ந்த உறக்கத்திலும் சிலர் பெரும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில், அவர்கள் திடீரென்று எழுப்பப்பெற்றனர். எழுந்த அவர்களே எதிரே கின்று வரவேற்றது மரணத்தின் சாயல்தான். என்ருலும் அவர்கள் பீதியால் பைத்திய மாகவில்லை; தங்கள் தங்கள் உயிர்களே காத்துக் கொள்ளப் போரிடவில்லை. இங்கிலேயில் காட்டப்பெற்ற வீரம் ஏதோ அகஸ்மாத்தாக அந்த கேரத்தில் தோன்றியது என்று கருதிவிட வேண்டா : ஒரு தனிப்பட்டவரின் பண்பாடு என்றுங் கருத வேண்டா. அவர்கள் பல காலமாக முயன்று பெற்ற தன்னடக்க மாகிய தேசியப் பண்பாட்டின் காட்சி வெளிப்பாடாகும் அது. மரணத்தை வெல்லும், மனித ஆன்ம பலத்தின் வெற்றியாகும் <罗利邬。 இந்த ஒரு நிகழ்ச்சியில் வெளிப்பட்ட ஆன்ம பலம், பல்வேறு துறைகளில், பல்வேறு வகைகளில், மேட்ைடார் வாழ்க்கையில் காணப்பட்ட தில்லையா ? காட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் முற்றிலும் தன்னலத் தியாகம் செய்து கொண்ட உதாரணங்கள் எண்ணற்றவை. இத்தகைய தியாகங்கள் பல ஒன்று சேர்ந்ததன் விளைவாகவே, ஐரோப்பிய நாகரிகம் கடல் நடுவே தோன்றும் பவளக் குன்று போல் தோன்றி வளர்ந்துள்ளது. - - துயரத்தை அனுபவிக்காமல் எந்தச் சமுதாயமும் முன்னேற் றத்தைப் பெற முடியாது. இந்தத் துயரத்தை அனுபவிக்க உலகாயதவாதிக்கு ஆற்றலே இல்லை. அவனுடைய இன்பம் அனைத்தும் உலகப் பொருளில் மட்டும் காணப்படுவதால் அவன் ஏன் அவற்றைத் துறக்க வேண்டும்? கெளரவம் அடையக் கூடுமானுல் துன்பத்தை பொறுத்துக் கொள்ள மக்கள் சித்தமாக