பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வாழ்வின் ஒற்றுமைத் தன்மையில் அவர் கொண்ட கம் பிக்கையே அவருடைய வலிமையாகும். அவருடைய சக்தியை எந்தப் பண்பாட்டுப் பிரிவினையும், குறிக்கோள் பிரிவினையும் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. எனவே கலேக்கும், வாழ்வுக்கும் இடையே எவ்விதப் பிரிவினயையும் அவர் காணுததில் வியப்பு ஒன்றுமில்லை. பத்தொன்பதசம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் அழகை வணங்கும் கொள்கை வெற்றி பெறலாயிற்று. வாழ்வோடு கலைக்குள்ள தொடர்பைப் பற்றிக் கவலைப்படாமல், கலையை கலைக் கீாகவே பயில வேண்டும் என்று கூறுபவர் பலர் இருந்தனர். வாழ்வில் காணப்படும்,கொடுமைகளிலிருந்து மறைந்து கொள்வதே கலே முயற்சியின் இலட்சியமாக இருந்து வந்தது. கவிஞனும் கலைஞனும் கனவு காண்பதில் தலையாயவர்கள் என்று இக்கொள்கை யுடையார் கடறினர். இந்த இலட்சியம் தாகடரின் இளமைப் பருவத்தில் அவரையும் கவர்ந்தது. ஆளுல் குடும்பச் சொத்தைப் பராமரிக்கும் பொறுப்புக் காரணமாக சாதாரண மனிதனின் இன்பம், துன்பம் என்ற இரண்டையும் நேருக்கு கேர் காணும் வாய்ப்பும் அவருக்கு ஏற்பட்டது. இந்த அனுபவத்தின் பிறகு, வாழ்வி லிருந்து பிரிக்கப்பட்ட கலேயை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். அழகை அவர் வழிபட்டாலும் அதனை வாழ்வின் ஒரு வெளிப்பாடாகவே கருதினர். அதனுடன் கூட, வாழ்வில் அழகு இருந்தாலொழிய அதில் எவ்வித சிறப்பும் இல்லை என்று கூறிஞர். தாகடரைப் பொறுத்தமட்டில் கவிஞனின் சமயமே மனிதனின் சம்ய மாகவும் இருந்தது. 翼 தாகூரின் வாழ்க்கையையும் அவருடைய நூல்களையும் ஆராயும் ஒருவர், அவருடைய பலதிறப் பயிற்சியுள்ள பேராற்றலேக் ● 歌 * تهیه و با این همسر وی، سی به - * கண்டு வியக்காமல் இருத்தற்கில்லே. முக்கியமாக அவர் ஒரு கவிஞர் எனினும், கவிதையோடு மட்டும் அவர் கின்று விடவில்லை. செய்துள்ள வேலையின் அளவைக் கணக்கிட்டாற்கட்ட எந்த எழுத்தாளரையும் அவருடன் ஒப்பிட முடியாது. ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல் களும் நீங்கலாக, மிகவும் அதிகமான சிறு கதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள் . பல்வேறு மாறுபட்ட துறைகளில் அவருடைய எழுத்தோவியங்கள் உள்ளன. தரத்திலுங்கூட அவர் எட்டிப் பிடித்துள்ள கிலேயை, மிக உயர்ந்த பண்பட்ட எழுத்தாளர் கள் மட்டுமே எட்டியுள்ளனர்.