பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 அனைத்துலக மனித்ன நோக்கி யும் அதனுடைய நற்பயனும் மிகக்குறைவு, அழிக்கும் சக்தியும் குறைவுதான். ஐரோப்பாவில் பாபமும் எல்லே மீறிய அளவு இருக், கிறதென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நம்முடைய காட்டில் காண முடியாத அளவில் எல்லே மீறிய அமைதி இன்மை அங்கிருக் கிறது. என்ருலும் இக் கிலேயைப் பார்த்துக்கொண்டு. ஐரோப்பிய மக்கள் வாளா இருந்துவிடவில்லை ; விழிப்புடையவர்காகவே உள் ளனர் அவர்கள். பைசாசம் எத்தனை வடிவில் இருப்பினும் அவை அனைத்தையும் அவர்கள் எதிர்க்கின்றனர். மலேரியர்க் கொசு விலிருந்து சமுதாயக் கொடுமைகள் வரை, உயிரையே விட்டுப் போரிடுவதாயினும் போர் செய்கின்றனர். ஒரு சிறிய கற்குணங் கூடப்பெரும் அச்சத்திலிருந்து நம்மைக் காக்கும் ’’’ என்று கீதை பேசுகிறது. சமுதாயத்தில், சிறிய அணு அளவில் காணப்படும். நற் பண்பு மிகப் பெரிய ஊழலையும் தடுக்க வல்லது. வலுக் குறைந்த மக்களை நடத்தும் விதத்தில் ஐரோப்பாவில் நடு கிலேமை நீங்கிய நிலைமையும் இருக்கிறது. அந்த நிலை ஒன்றுமட்டும் கடைமுறையி லுள்ளது என்று கூறுவதற்கில்லை. பேராசை கொடுமை நிரம்பியதாகவும், அதிகாரப் لالس65DL[(تgsg|ریے பித்துடையதாகவும் இருப்பினும், அது செய்யும் காரியம் மான மிழந்ததாக உள்ளது என்ற குரலும் அந்த காட்டிலிருந்தே எழும்புகிறது. அதிகார வர்க்கத்தின் கொடுமையை எதிர்த்துப் போராடும் வீரர்கட்கும் ஐரோப்பாவில் பஞ்சமில்லை. அத்தகைய நேர்மையுடைய வீரர்கள் மிக நீண்ட தூரத்தில் கண் காணு காட்டிலுள்ள மக்களுக்காக வாதாடி அதல்ை ஏற்படும் துன்பத் தையும் அனுபவிக்கின்றனர். தங்கள் காட்டிற்கு சுய ஆட்சியை விரும்பி நிற்கும் இந்தியர்கட்கு நண்பர்கள் யார்? தடை, அவ மரியாதை என்பவற்றைப் பொருட்படுத்தாமல், தங்களுடைய நாட்டாரைப் பார்த்து, தன்னலத்தைக் கைவிட்டு நியாயத்தை நி3ல கிறுத்துமாறு கேட்கின்ற, ஐரோப்பிய நாட்டில் உள்ள, சிலரே யாவர். மேலாகப் பார்க்கும் பொழுது அவர்கள் எண்ணிக் கையில் குறைந்தவர்களாக உள்ளனர்; ஆளுல் உண்மையில் அவ்வாறில்லை. ஏனென்ருல் இவர்களே எண்ணிக்கையால் மட்டும் மதிப்பிடக் கூடாது இவர்கள் ஒருதனிப்பட்ட மரபின் பகுதி யாவார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே முடிவுக்காக உழைப்பதில்லை; ஆனலும் அவர்களே சமுதாயத்தின் உண்மை மனச் சான்று ஆவர். வலிவற்றவர்களேக் காக்க விரதம் பூண்ட கருணை மறவர்கள் இவர்கள். உலகமக்களின் புரவங்களைத் தன்