பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அனைத்துலக மனிதன் நோக்கி இந்த ஆபத்துக்களே, இந்தப் பயணத்தைச் சத்தியத்தின் யத் திரையாக ஆக்கிவிடுகின்றன. தடைகளே எல்லாம் தாண்டிக், சென்று கஷ்டமான பாதையில் செல்லும் துன்பத்தைப் பொறுத்துத் கொள்ளவேண்டும். தற்பெருமை என்ற் அணுவசியமான பாரத்தை ஒருபுறத்தில் ஒதுக்கிவிட வேண்டும். அதே நேரத்தில் உண்மையில் நாம் கர்வமடையக்கூடிய காரணங்களைக் கவனத். துடன் பாதுகாக்க வேண்டும். உண்மையைக் கூறவேண்டுமாளுல் இந்தப் பயணத்தில் உள்ள இடையூறுகளே இதனைப் பயனுடைய தாகச் செய்கின்றன. ஏனென்ருல் எளிதாகக் கிடைத்துவிடுபவை: கம்மால் அனுபவிக்கப் பெற்று நம்மில் ஒரு பகுதியாக ஆவதில்லை. என்ருலும், மனச் சான்று முழுவதும் விரிவடைய எல்லா உண்மை இலாபங்களும், உதவவேண்டும். மற்ருெரு வகையாகக் கடறுமிடத்து' நாம் உண்மையாகச் செய்து முடிப்பவை, நம்மையே அறிதற்குப் மேலும் பெரிய அளவில் பயன்பட வேண்டும். அவ்வாறு செய்ய வில்லையாளுல் பிற இலாபங்கள் புறத்தே தங்கி விடும்; மேலும் அவை பொய்யானவையாகவே இருந்து விடும். - —1912. தன்னிடமுள்ள முள்ளுக்கு மன்னிப்புக் கோருவதைவிட ரோஜாப் பூ இன்னும் அதிகப் பயனுடையதாகும். -ரவீந்தரநாத் தாகூர்.