பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 அனைத்துலக மனிதனை நோக்கி கிறது. குற்றத்தைப் பிரம்பின் மேலேயும், மூங்கிஜின் மேலேயும் போடுவதை விட்டுவிட்டு, நம் மேலேயே சாற்றிக் கொள்ளவேண்டும். உண்மையைக் காட்டிலும் தலைவனுக்கு அதிக மரியாதை கொடுத்து, - அவருடைய சொற்களுக்குக் கீழ்ப்படிகின்ற ம்ேமுடைய இயல்பும், கண்களைக் காட்டிலும் இமைகளை அதிகம் நம்புகின்ற கம் , இயல்புந்தான் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த கிலேமை நீடிக்கின்ற வரையில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையி லிருந்து நம்மை நோக்கிப் பிரம்புகள் வந்துகொண்டே யிருக்கும். ஐரோப்பாவில்கட்ட மனிதர்களுடைய எல்லா விஷயங்களிலும், மாதா கோயில் தலையிட்ட காலம் ஒன்றுண்டு. இந்த விலங்கு களை உடைத் தெறிந்தபொழுதுதான் ஐரோப்பிய தேசங்கள் சுயாட்சியை நோக்கி அடி யெடுத்து வைக்க முடிந்தது. இங்கி லாந்து ஒரு தனித் தீவாக இருந்ததும், மாதா கோவிலின் தலைமை யிடம் ரோம் நாட்டில் இருந்ததும், ஆங்கிலேயர்கள் ரோமாபுரியின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு தனிப்பட்ட வழி யையும், வசதியையும் அளித்தது. இங்கிலாந்தில் மாதா கோயி லுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை யென்று சொல்ல வர வில்லை. ஆளுல், உயர்ந்த குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், தான் : கைம்பெண்ணுணவுடன் குடும்பத்தில் தனக் கிருந்த பழைய மரியா தையை இழந்துவிட்ட கிலேயில்தான், இன்று இங்கிலாந்தில் மாதா கோயிலின் கிலேமை இருந்துவருகிறது. பிறருக்குத் துன்பம் கொடுக்கக்கட்டிய சக்தியை ஒரு காலத்தில் அந்தப் பெண் பெற்றிருங் தாலும், இன்று அவள் மாதாந்திரப் படியைப் பெற்றுக்கொண்டு ஒரு மூலே யறையில் வாழ்கிருள். வீட்டிலுள்ள இளைஞர்கள் பயம் காரணமாக அவளுக்கு மரியாதை செலுத்துகிருர்களே தவிர, யாரும் அவளுக்குக் கீழ்ப்படிவதில்லை. முன்னைப்போல் அவளுக்கு அதிகாரமும் சக்தியும் இருந்திருக்குமேயாளுல் இளைஞர்களே அடக்கி யாண்டு இருப்பாள். - - • . - ها بر இந்தக் கிழவியின் அதிகார நுகத்தடியை, நீண். காலத்திற்கு முன்பே இங்கிலாந்து தேசம் உதறி யெறிந்துவிட்டது. ஸ்பெயின் தேசம், முற்றிலும் அவ்வாறு செய்ய இன்னும் முடியவில்லை. ஒரு காலத்தில் கடல் முழுவதிலும் ஸ்பெயின் தேசம் தன்னுடைய ஆனயைச் செலுத்திப் பல்வேறு நாடுகளிலும் தன்னுடைய கொடியை ஊன்றியது. ஆளுல் இன்று ஸ்பெயின் தேசம் அந்தச் செல்வாக்கை இழந்ததற்குக் காரணம் அங்தக் கிழவி அதிகார பீடத்தில் இருப்பதுதான். ஸ்பெயின் தேசம் மிகத் தீவிரமான