பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 38 - அனைத்துலக மனிதனை நோக்கி குப் பல்வேறு புரட்சிகளை மேற்கொள்ளவேண்டி யிருந்தது : என்று கடறலாம். நானும் இதனை ஒப்புக் கொள்கிறேன். உலகத்தி லுள்ள முன்னேற்றமான தேசங்கள் அனைத்தும் "உண்மையின் பல்வேறு பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளன. இந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பின் அடிப்படையிலும் பல பிழைகளும், எல்லே யற்ற துன்பங்களும் பலமான துயரங்களும் இருக்கின்றன. ஆளுல் இந்தக் கண்டுபிடிப்பின் பயன்களை அனுபவிக்கின்ற தேசங்கள் அனைத்துமே இந்தப் பிழைகள், துன்பங்கள், துயரங்கள் ஆகிய வற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற தேவையில்லை. வங்காளி, மாளுக்கர்கள் அமெரிக்காவுக்குச் சென்று இரயில் இன்ஜின் செய் யும் விஞ்ஞானத்தைச் சித்தாந்த முறையிலும், நடைமுறையிலும் கற்றுக்கொள்கிருர்கள். அவர்கள் மிகச் சில ஆண்டுகளுக்குள் ளாக இதனைச் செய்து முடிக்கிருர்கள். இதை விட்டுவிட்டு, நீராவி யந்திர வளர்ச்சி விஞ்ஞானத்தைக் கெட்டில் கொதிப்பதிலிருந்து படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்ள நேரிட்டால், மெது சூலாவைப் போலப் பன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வாழ்ந்தால்தான் முடியும். ஐரோப்பிய விஞ்ஞானம், ஐரோப்பிய மண்ணில் அந்தச் சூரியன், அந்த மழை, அந்தக் காற்று, அந்தப் புயல் ஆகியவற்றுடன் சேர்ந்து பல யுகங்களாக வளர்ச்சி யடைந்தது என்ருலும், அதனை ஜப்பானில் பெயர்த்து நடட் பொழுது அது வளர்ச்சி யடைவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளவில்லே. t கம்முடைய நடத்தையிலும் பண்பாட்டிலும் அழுத்தம் இல்லை யென்பது உண்மையானல் அதுவே நமக்கு அதிகப்படியான அதி காரம் வேண்டு மென்பதற்குச் சிறந்த காரணமாகும், ஒரு குறிப் பிட்ட மனிதனிடத்தில் ஒன்றும் இல்லை யென்ற எண்ணத்துடன் தொடங்கினுல் அவனிடத்தில் என்ன இருக்கிற தென்பதை நீங்கள் கடைசி வரையில் காணமுடியாது. பிரிட்டிஷார் நமக்குச் சுயாட்சி வழங்குவதன் மூலம் கமமிடையே மறைந்து கிடக்கின்ற புதிய சக்தி களைக் காணுமாறு வழி வகுக்க முடியும். சுயாட்சி வழங்காமல் விட்டு வைத்து அதன்மூலம் அகில உலகமும் கண்டு சிரிக்கின்ற நிலையில் நம்மைச் செய்துவிட்டால், நம்முடைய தலையாய பகைவர்கள் அவர்களே என்பதை நிரூபித்து விடுவார்கள். எப்பக்கம் திரும்பின லும் ஓரிரு அடிகள் எடுத்து வைத்தாலும் முட்டிக்கொள்ளக்கட்டிய அல்லது இடித்துக்கொள்ளக்கட்டிய சிறிய அறையில் வைத்துப் பூட்டப்பெற்ற ஒரு மனிதன் வாழ்க்கையின் எல்லர்ப் பகுதிகளிலும்