பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் விருப்பமே நடைபெறும் 231. அவனுடைய கழுத்தைச் சுற்றித் தன்னுடைய மாலையை அணிவித் துள்ளது. மெய்ஞ் ஞானத்தின் ஒளி அவனுடைய நெற்றியில் பரவு கிறது. நீண்டு கிடக்கின்ற எதிர்காலம்கூட அவனே மகிழ்ச்சி யோடு வரவேற்கின்றது. அந்த பூமன்தான் என்னுடைய இருதயத்தில் கொலு வீற்றிருக்க விரும்புகிருன். என் இதயத்தில் மட்டு மல்லாமல், இளமையிலேயே முதுமை யெய்திக் களைப்புற்றும், தன் னம்பிக்கை யின்மையில்ை கோழையாகியும், பொய்களின் பெரும் பாரம் தாங்காமல் முதுகு வளைந்தும் இருக்கின்ற எல்லா மனிதர்களுடைய இருதயத்திலும் அதே பூமன் கொலு வீற்றிருக்க விரும்புகிருன். r நம்மிடமுள்ள அற்பத்தனமான பொருமை, அற்பத்தனமான விரோதம் ஆகியவற்றின் காரணமாக நமக்குள் சண்டை போடு வதற்கு இப்போது காலம் இல்லை. சிறு அதிகாரங்கள், சிறு கெளர வங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்குப் பிச்சைக்காரர்கள் போல் நாம் அடித்துக்கொண் டிருக்க இப்போதுநேரம் இல்லை. தன்னுடைய சிறிய வீட்டினுள் இருளில் இருந்துகொண்டு கையையும் காலேயும் ஆட்டினுலும், உலகத்தார் கண்ணெதிரே அவமானப்படுகின்ற அந்தப் பொய்யான கர்வத்தை வைத்துக் கொண்டு கம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள இப்போது நேரமில்லை. பிறரைப்பற்றித் தவருன கருத்துக்களைப் பரப்பி அதனுல் பொழுது போக்கும் இயல்பு, பல மற்றவர்களின் பொழுதுபோக்காகும்; அதனைச் செய்வதன் மூலம் சிறு திருப்தி யடைய நாம் விரும்பக் கூடாது. நெடுங் காலமாக நம் மிடம் சேர்ந்துள்ள குற்றங்கள் ஒன்று சேர்த்து அழுத்துகின்ற காரணத்தால் நம்முடைய ஆண்மை நசுங்கிப் பகுத்தறிவும் தொழிற் படாமல் போய்விட்டது. அந்தக் குற்றங்களே மேற்கொண்டதற் காக நம்மை நாமே குற்றம் கூறிக்கொள்ள வேண்டிய நாள் இது. பல நூற்ருண்டுகளாக நம்மிடம் சேர்ந்துள்ள குப்பை, மலே போல் குவிந்து கிடத்தலின், நம்முடைய சக்தி முழுவதையும் பயன் படுத்திக் கூட்டித் தள்ளவேண்டும். நம்முடைய முன்னேற்றத்தைத் தடை செய்கின்ற மாபெரும் தடை நமக்குப் பின்னேதான் இருக்கின்றது. நம்முடைய பழமை, நம்முடைய எதிர் காலத்தில் தன்னுடைய அம்பை எய்திருக்கின்றது. நம்முடைய பழமை கிளப்பிய துாசியும், சருகுகளும் புதிய யுகத்தின் காலேக் கதிரவனை நாம் காண வொட்டாமல் தடை செய் கின்றன. புதிதாக விழிப்படைந்த நம்முடைய இளமையின் பலத்தை பெல்லாம் அது கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சுகிறது.