பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as: அனைத்துலக மனிதனை ந்ோக்கி கொஞ்சமும் கருணை காட்டாமல் கம்முடைய பழமையிலிருந்து நாம் பிரிந்துவிட வேண்டும். அன்றியும் உலகத்தில் ஓயாத விழிப் போடும், ஓயாத உயிர்த் துடிப்போடும், ஓயாத முன்னேற்ற சக்தி யோடும் ஓயாமல் முனையும் மக்களின் வரிசிையில் நாமும் கிற்க வேண்டும். இத்தகைய ஆண்களும் பெண்களும் இந்த அண்டத் தின் சிற்பியாகிய விஸ்வகர்மாவின் வலக் கை போன்றவர்கள் ஆவார்கள். சலியா உழைப்புடன் உண்மையை நாடி அவர்கள் மேற்கொள்ளும் பாதை அறிவின் ஒளி பெற்று விளங்குகின்ற காரணத்தால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நகரமும் அவர்க ஞடைய வெற்றியை எதிரொலிக்கின்றது. - ஆடி மாதத்து அடை (ஸ்ரவண*") மழையைப் போலத் துன்பங் கள் நம் மேல் பொழிந்து கொண்டே யிருந்தமையின் அதன் பயணுக நம்முள்ளே கருமையான ஓர் அசுத்தம் கிரம்பிவிட்டது. அதனைப் போக்க வேண்டும். அதனை எவ்வாறு போக்குவது? துன்பங் களே எல்லாம் யாக குண்ட நெருப்பாக ஏற்றுக்கொள்வோமே யானுல், நம்முடைய குற்றங்கள், அறியாமைகள், இயக்க மின்மை ஆகியவற்றைப் பொசுக்கும் நெருப்பாக ஏற்றுக்கொண்டால் அது இயலும். எனவே முழு முதற் பொருளே விரும்பி யழைத்து அவனுக்கு எதிரே நம்முடைய அற்பத்தனத்தைப் படைக்காமல், நித்தியத்துவம் பெற்று நம்முள்ளே இருக்கின்ற ஜீவாத்மாவைப் படைப்போமாக. நம்முடைய ஜீவ ஆன்மாவைப் ப்ரம ஆன்மா தன்னுடைய சிம்மாசனத்தின் வலப் புறத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று நாம் பிரார்த்திப்போமாக. தாழ்மை அவமானப் படுத்தப்பட்டு, அடிமைத்தனம் அழிக்கப்பட்டு, முட்டாள்தனம் முறியடிக்கப்பட்டு, இவை யனைத்தும் நம்மை விட்டு நீங்குமாறு செய்யப்படுவதாக. —1917.