பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இந்தியப் பண்பாட்டு நிலையம் தனக்கென ஒரு மனம் இருக்கிற தென்பதையும், அதற்குத் தோன்றிய முறையில் வாழ்க்கைப் பிரச்னைகளை ஆராய்ந்து, முடிவு காண மிகவும் கவலே எடுத்துக் கொள்கிற தென்பதையும், இந்தியா நிரூபித்துவிட்டது. கல்வித் துறையில், இந்த மனத்தை அதன் விருப்பப்படி, விருப்பமான வழியில் ஆராய்ச்சி செய்யுமாறு உதவி புரிவதே இந்தியாவின் இலட்சியம் ஆகும். இச் செயலே கிறைவேற்றுவதற்கு இந்தியாவின் மனம் ஒழுங்கு முறைப்படுத்தப்பெற்று, தன்னறிவு உள்ளதாகச் செய்யப்பெற வேண்டும். அப்பொழுதுதான், அதனுடைய ஆசிரியர்களிடத் திலிருந்து என்ன முறையில் கற்றுக் கொள்ள வேண்டுமோ, அந்த முறையில் கல்வியை அது ஏற்றுக் கொள்ளும். அப்பொழுதுதான், . தனக்கேற்ற மதிப்பீட்டு அளவைகளால் அந்தக் கல்வியை ஆராய்ந்து, தன்னுடைய ஆக்க சக்திக்கு அக் கல்வியைப் பயன் படுத்திக்கொள்ள முடியும். கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் விரல் களை முதலில் குவிக்க வேண்டும். சிதறுண்டு கிடக்கிற மனங்களே ஒன்று சேர்த்துத் தொழிற்படும் செயலுக்குக் செலுத்தில்ை, அந்த மனங்கள், ஏற்றுக் கொள்ளக் கூடிய சக்தியையும், ஆக்க சக்தி யையும் நல்ல முறையில் பெறக் கட்டும். அப்பொழுதுதான் வாழ்வு என்ற தண்ணீர், ஒட்டைகளின் வழியாகப் பூமியில் விழுந்து பயனற்றுப் போகாமல் இருக்கும். கல்வியில் மிக முக்கியமான பகுதி என்னவென்ருல், ஆக்கச் செயலில் ஈடுபடும் சூழ்கிலேயே யாகும். அந்தச் சூழ்நிலையில்தான் அறிவின் துணைகொண்டு புதியன கானும் இயல்பு கல்ல வாய்ப்பைப் பெறும். போதித்தல் என்பது, பண்பாடாகிய ஊற்றிலிருந்து தானே வெளி வரும் தண்ணிர் போன்று தடை இல்லாமல் உடனே கொட்டுகின்ற இயல்புடன் வெளி வர வேண்டும். வாழ்ந்து, வளர்ந்து வருகின்ற மெய் யறிவின் பயனுகக் கல்வி ன்பது கிடைக்கும் பொழுதுதான் இயற்கையானதாய், முழுத்தனமை பெற்றதாய் இருக்க முடியும். “, மேலும் கம்முடைய போருளாதார அறிவியல், அழகியல், சமு. தாய, ஆன்மீக முழு வாழ்க்கை என்பவையோடு நம்முடைய கல்வி ஓயாது தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சமுதாயத்தின் இருதய ஸ்தானத்தில் பல்வேறு வகையாலும் ஒத்துழைக்கின்ற பிணைப்புக் களோடு பொருந்தியதாய் நம்முடைய பள்ளிக்கூடங்கள் அமைய வேண்டும். ஏனென்ருல், உண்மையான கல்வி என்பது ஒவ்வொரு