பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 அனைத்துலக மனிதனை நோக்கி வேளையிலும் எவ்வாறு நம்முடைய பயிற்சியும், அறிவும் சூழ்கில்ே யோடு உயிர்த் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை உணர் வதே யாகும். - II (! இக்தியா முழுவதிலும், இன்றுள்ள கல்வி முறையைப் பற்றிப் பனிப் படலம் போன்ற ஒரு வெறுப்புத் தோன்றியுள்ளது. சமீப காலத்தில் இதில் பெரு மாற்றம் தேவை யென்பதை அறிவிக்கப் பல அறிகுறிகள் தோன்றியுள்ளன. நம்முடைய தேசீய மனப் பான்மையின் ஆழத்தில் உயிர்த் துடிப்புக் காணப்படுகிறது. அந்த உயிர்த் துடிப்பே, புதிய நிறுவனங்களே உண்டாக்கிப் புதிய சோதனை களே மேற்கொள்ளுமாறு செய்கிறது. மனிதனுடைய விருப்ப்ம் திடீரென்றும் வலிமையாகவும் தோன்றுவதால் இந்த விருப்பத்தின் மூல காரணம் எங்கே யென்று ஆராய்ந்து, அது எதனை உள்ளுர விரும்புகிறது என்பதையும் ஆராய்ந்து முடிவு செய்வது கடினமாக ஆகி விடுகிறது. - - இன்று நாம் பெறுகின்ற கல்வி முறையும் அதில் தோய்க் திருக்கின்ற நம் மனநிலையும் நம்முடைய பெளதீக உடம்பைப் போலப் பருப் பொருளாக இருத்தலின், அதில் மாற்றம் ஏற்படக் கட்டுமென்று நம்மால் கினைக்க முடியவில்லை. நம்முடைய கற்பனை, அதனுடைய எல்லேயைத் தாண்டிப் பறக்கத் துணிவதில்லை. அதனைப் புறத்தேயிருந்து கண்டு தீர்ப்புச் சொல்ல நம்மர்ல் முடிவ தில்லை. நம்முடைய அறிவுவாழ்க்கைகட்ட இந்தக் கல்வி முறையின் பயணுகப்பெற்ற தாதலின், அதன் மேல் ஏற்பட்டுள்ள இயல்பான பற்றுக் காரணமாக, இந்தக் கல்வி முறையை வேருென்ருல் மாற்றி யமைக்க வேண்டுமென்று சொல்ல நமக்குத் தைரியமோ, விருப்பமோ வருவதில்லை. என்ருலும் நம்முடைய மந்தத் தன்மையினுள்ளேகட்ட ஒரு முள் இருந்து கொண்டு, நம்மைச் செளகரியமாகத் தூங்கவிடாமல் செய்கிறது. இரகசியமாக இந்த முள் குத்தும் போதெல்லாம் அதனுல் ஏற்படும் எரிச்சல் தாங்க முடியாமல் ஏதோ புறத்தே யிருந்து நம்மை யாரோ செய்வதாக கினைத்து எரிச்சலின் காரணத்தை அங்கே தள்ள முயல்கிருேம். கம்முடைய கல்வி முறை யிலுள்ள ஒரே குறை அது நம்முடைய அதிகாரத்தின் கீழ் இல்லை யென்பதே என்று கூறுகிருேம். படகு கடலில் செல்லத் தகுதியுடைய தென்றும் சுக்கான நம்முடைய கைகளில் கொடுத்து விட்டால் அதில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் போக முடியும் என்றும்.